வீராக்கன்
வீராக்கன் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் செந்துறை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது ஜெயங்கொண்டத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், செந்துறையில் இருந்து 11 கி.மீ தொலைவிலும், அரியலூரில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் உள்ளது.இங்கு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி (காந்தி கலா நிலையம்) உள்ளது.
இதன் அருகிலேயே 2012 ம் ஆண்டு முதல் பாரத ஸ்டேட் வங்கியின் பொன்பரப்பி கிளையின் வாடிக்கையாளர் சேவை மையமும், 2014 ம் ஆண்டு முதல் பகுதி நேர நூலகமும் இயங்கி வருகிறது . இங்கு வீரனார் கோயில், ஐயனார் கோயில்,சாலியங்கோவில் (மல்யுத்த ஐயனார் மதுரை வீரன் கோயில்),விநாயகர் கோயில், மாரியம்மன் கோயில், ஆதிபராசக்தி கோயில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மஹாசிவராத்திரி அன்று ஐயனார் கோயிலில் ஊர்கூடி விமர்சியாக திருவிழா நடைபெறும்.ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர் திருநாள் (கரிநாள்) அன்று கிராமத்து இளைஞர்களால் தமிழர் திருநாள் கொண்டாடபடும் இந்த நிகழ்வில் சிறுவர்,சிறுமிகளும், இளைஞர்,இளைஞிகளும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.
இங்கு பெரும்பாலானோர் ஆசிரியப்பணியிலும், காவல் துறையிலும் பணிபுரிகின்றனர்.