வீரேந்திரநாத் சட்டோபாத்யாய

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய,செருமானிய கூட்டுச் சதி

வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா (ஆங்கிலம்:Virendranath Chattopadhyay, வங்காள: বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, 1880-1937) வங்காளத்தைச் சேர்ந்தவர்; பொதுவுடைமையாளர்; இந்தியாவில் ஆயுதப் புரட்சியை உருவாக்கி அதன் மூலமாக இந்திய விடுதலையைப் பெற விரும்பியவர். சாட்டோ என்று செல்லமாக இவரை அழைத்தனர். கவிக்குயில் சரோஜினி நாயுடு என்பாரின் தம்பி ஆவார்.

வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா
வீரேந்திரநாத் சட்டோபாத்யாய.jpg
பிறப்பு1880
ஹைதராபாத், பிரித்தானிய இந்தியா
இறப்பு1937
சோவியத் யூனியன் என நம்பப்படுகிறது
மற்ற பெயர்கள்சாட்டோ
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம், இந்திய-செர்மனி சதி

பிறப்பும் படிப்பும்தொகு

ஐதராபாத்தில் ஒரு வங்காளிக் குடும்பத்தில் பிறந்தார். வீரேந்திரநாத்தின் தந்தையார் (அகோரநாத் சட்டோபாத்யாயா) ஐதராபாத் நிசாமின் கல்லூரியின் முதல்வராகப் பணி புரிந்த காரணத்தால் குடும்பம் ஐதராபாத்தில் வசித்தது.சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெட்ரிக்குலேசன் படிப்பும் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் கலையும் படித்தார். 1902இல் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இந்தியன் சிவில் சர்வீசு கல்வியும் பின்னர் சட்டக் கல்வியும் பயின்றார். இவருக்குத் தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, பிரஞ்சு, ரசியன், செர்மன், ஆங்கிலம் ஆகியவற்றைப் பேசவும் எழுதவும் நன்றாகத் தெரிந்திருந்தது.

லண்டனில் இந்தியா அவுசில் வி.டி சவர்க்கர், பிபின் சந்திர பால், வ.வே.சு.ஐயர் போன்றோரின் நட்பைப் பெற்றார். 1909 இல் தல்வார் என்னும் பெயரில் ஓரிதழை நடத்தினார். 1910 இல் வ.வே.சு.ஐயர், மாதவ் ராவ் ஆகியோருடன் பாரீசுக்குச் சென்றார். அங்கு பன்னாட்டு உழைப்பாளர்கள் சங்கத்தில் சேர்ந்தார்.1921 முதல் 1928 வரை ஆக்னசு ஸ்மேட்லி என்னும் பெண்ணுடன் வாழ்ந்தார்.

செருமனி வாழ்க்கைதொகு

1914 இல் உலகப் போரின் நெருக்கடியினால் செருமனிக்குப் பயணமானார். அங்கு தம் மீது ஐயம் ஏற்படாதவண்ணம் பல்கலைக் கழக மாணவராகப் பதிவு செய்து கொண்டார். ஆயுதங்கள் வாங்குவதற்கும் போராளிகளைத் தயார் செய்வதற்கும் முனைப்பாக இயங்கி வந்தார். பிரிட்டிசு உளவுத் துறை சாட்டோவைத் துரத்தியது. 1923இல் செருமனி பொதுவுடைமைக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டார்

மாசுகோ வாழ்க்கைதொகு

1931-33 காலத்தில் இட்லருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.1932 முதல் மாசுகோவில் வாழ்ந்து வந்தார். பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். 1937 இல் அவரைத் தேசத் துரோகி என்று ஸ்டாலின் அரசு அறிவித்தது அவருடன் மொத்தம் 184 பேர் கைதாகி இருந்தனர். சிறையில் இருந்த அத்தனைப் பேரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

நேருவின் நட்புதொகு

1927 இல் பிரச்சல்சில் நிகழ்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாட்டில் நேரு கலந்து கொண்டபோது அவருடன் சாட்டோவும் உடன் சென்றார். சவகர்லால் நேரு தம் வரலாற்றில் வீரேந்திரநாத் சட்டோபாத்யாயாவின் சந்திப்பைப் பற்றிப் புகழ்ந்து எழுதியுள்ளார். 1937 இல் சாட்டோவின் உடல் நலம் குறித்து உசாவி நேரு சாட்டோவிற்கு மடல் எழுதினார். எம்.என்.ராய் என்னும் புரட்சிப் பொதுவுடைமையாளரின் நட்புக்கும் அன்புக்கும் உரியவர் ஆனார்.

மேற்சான்றுதொகு

http://hssthistory.blogspot.in/2011/04/virendranath-chattopadhyaya.htmlhttp://hssthistory.blogspot.in/2011/04/virendranath-chattopadhyaya.html