வீர் சிங்
வீர் சிங் (Vir Singh) இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராவார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வீர் சிங் சீருடற்பயிற்சி விளையாட்டின் ஏழு பிரிவுகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு விளையாடினார்.[1]
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியன் |
பிறப்பு | 8 சூலை 1930 |
விளையாட்டு | |
விளையாட்டு | சீருடற்பயிற்சி |
சீருடற்பயிற்சி விளையாட்டில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் போட்டி பிரதிநிதித்துவம் வீர் சிங் மற்றும் குசி ராம் ஆகிய இருவருமாவர். போட்டியின் போது வீர் சிங்கிற்கு 22 வயது ஆகும். பஞ்சாபில் உள்ள சிறிய நகரமான குருதாசுபூர் இவருடைய சொந்த ஊராகும். அப்போது இந்நகரம் இந்தியாவில் சீருடற்பயிற்சி வீர்ர்களை உருவாக்கும் நகரமாகக் கருதப்பட்டது.
185 சீருடற்பயிற்சி வீர்ர்கள் கலந்துகொண்ட 1952 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், வீர் சிங் கலந்து கொண்ட அனைத்து பிரிவுகளிலும் கடைசி ஐந்து இடங்களில் ஒன்றை மட்டுமே அவரால் பிடிக்க முடிந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vir Singh Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019. பரணிடப்பட்டது 2012-12-17 at the வந்தவழி இயந்திரம்