வீர சோமேசுவரன்

வீர சோமேசுவரன் ( கன்னடத்தில் : ವೀರ ಸೋಮೇಶ್ವರ) (ஆட்சிக்காலம் 1235-1254) என்பவன் போசாளப் பேரரசின் ஒரு மன்னனாவான்.[1] தமிழ் நாட்டு விவகாரங்களில் இரண்டாம் வீர நரசிம்மன் அதிக கவனம் செலுத்தி, வடக்கு பிரதேசங்களைப் புறக்கணித்ததின் விளைவாக, யாதவர்களின் படைகளிடம் துங்கபத்திரை ஆற்றுப் பகுதிகளில் சில பகுதிகளை இவன் இழக்க வேண்டியிருந்தது.[2][3]

வீர சோமேசுவரன்
போசள மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் 1235-1263 பொ.ஊ
முன்னையவர்இரண்டாம் வீர நரசிம்மன்
பின்னையவர்மூன்றாம் நரசிம்மன்
அரசமரபுபோசளப் பேரரசு

தமிழ் நாட்டில் அரசியலில் செல்வாக்கு

தொகு

கி.பி.1225-1250 காலப்பகுதியில் போசாளர்கள் சோழர்கள், பாண்டியர்கள் மீது தமது செல்வாக்கை உறுதிப்படுத்திக்கொண்டனர். மகதி மண்டலத்தில் சில பகுதிகளை வீர சோமேசுவரன் 1236-இல் கைப்பற்றினான்.

மேற்கோள்

தொகு
  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 58–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  2. Ayyar, P. V. Jagadisa (1982). South Indian Shrines: Illustrated (in ஆங்கிலம்). Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0151-2.
  3. Yadava, S. D. S. (2006). Followers of Krishna: Yadavas of India (in ஆங்கிலம்). Lancer Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7062-216-1.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_சோமேசுவரன்&oldid=3463608" இலிருந்து மீள்விக்கப்பட்டது