வீர மங்கை நாஞ்செலி

திருவிதாங்கூர் நாடு

தொகு

திருவிதாங்கூர் நாடு இந்தியாவின் கேரள மாநிலத்தின் தென் பகுதிகளையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியது. திருவிதாங்கூர் நாடு, திருவனந்தபுரத்தை தலைநகராக கொண்டும், வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொரித்த செந்நிறக் கொடியைக் கொண்டும் ஆட்சி நடத்தப்பட்டது.

தோள் சீலைக்கு வரி

தொகு

தோள் சீலைக்கு வரி விதிக்கும் வழக்கம் 19-ம் நூற்றாண்டிலும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஈழவர்கள் அதிகமாக வாழ்ந்த கேரளாவில் திருவாங்கூர் அரசன், ஈழவ பெண்கள் மார்பை மறைக்க வரி விதித்து வந்தான். திருவாங்கூர் அரசு கூறியது யாதெனில் “மார்பை மறைக்க விரும்பும் ஈழவ பெண்கள், கட்ட வேண்டிய வரி, தோள் சீலை வரி. மறைக்க விரும்பவில்லையென்றால் வரி கிடையாது”.[1]

நாஞ்செலியின் வீரஉணர்வு

தொகு

திருவிதாங்கூர் அரசுக்கு உட்பட்ட பகுதியில் சேர்தலா என்ற இடத்தில் ஒரு சிற்றுரில் 30 வயதுடைய நாஞ்செலி வசித்து வந்தார். அவர் “எனது மானத்தை காப்பது எனது உரிமை” என்றார். இந்த கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாக போராடிக் கொண்டிருந்தார். திருவிதாங்கூர் அரசுக்கு வரி செலுத்தவும் மறுத்துவிட்டார்.[2]

ஆனால் இன்று வரை இவருக்கு எந்த பகுதியிலும் நினைவு சிலை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[3]

சாதியின் பெயரால் அடிமைப்படுத்தும் நிலை மாற வேண்டும். மானம் என்பது அனைவருக்கும் உண்டு என்பதை மனித குலம் அறிய வேண்டும். சமுக நலனுக்காக தன் உயிரிரையே தியாகம் செய்யும் இத்தகைய இலட்சிய பேராளிகளை சமுகம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. நெல்லை விவேகானந்தா எழுதிய தோள் சீலைப் போராட்டம்
  2. "தோளுக்கு சீலை போராட்டம் ஒரு பார்வை".
  3. cite book | title=ஒரு மறைக்கப்பட்ட வரலாறு | publisher=நளதம் , ஈஸ்வர பாக்கியம் | author=ஜாய் ஞானதாசன் | year=2016 | pages=39-43
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_மங்கை_நாஞ்செலி&oldid=3505538" இலிருந்து மீள்விக்கப்பட்டது