வீற்றிருந்த பெருமாள் கோவில், ஓமந்தூர்
வீற்றிருந்த பெருமாள் கோவில் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் சுமார் 10 கிமீ தொலைவில் ஓமந்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. வீற்றிருந்தபெருமாள் என்றால் அமர்ந்த நிலையில் உள்ள பெருமாளைக் குறிக்கும்.
வரலாறு
தொகுபண்டைய நாளில் ஓய்மா நாடு என்று இப்பகுதி என்றழைக்கப்பட்டது. தற்போதைய திண்டிவனம் முன்பு கிடங்கில் எனப்பட்டது. நல்லியக்கோடன் என்னும் மன்னன் கிடங்கிலை தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்தான் என சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படை புகழ்ந்து பேசுகிறது. ஒகந்தூர் என்பது காலப்போக்கில் திரிந்து ஓமந்தூர் என அழைக்கப்படுகிறது.[1]
பெருமாள், தாயார்
தொகுஇங்குள்ள சிவன் கோயிலில் காணப்படும் விஜயநகர மன்னர் காலக் கல்வெட்டு இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளை வீற்றிருந்த பெருமாள் என குறிப்பிடுகிறது. சுமார் 10 அடி உயரத்தில் திருமால், தேவி தாயார்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அற்புத அழகான வடிவினைக் கண்டு வழிபடலாம்.[1]
புதுப்பித்தல்
தொகுபழைய கோயில் இருந்த இடத்திற்கு அருகில், கோயில் மீண்டும் புதுப்பித்து பெரிய அளவில் கட்டப்பட்டு வருகிறது.[1]
வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள்
தொகுஇதே பெயரில் உள்ள மற்றொரு வீற்றிருந்த பெருமாள் கோயில் புதுப்பிக்கும் நாளை எதிர்பார்த்து உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 எஸ்.வெங்கட்ராமன் (செப்டம்பர் 12, 2014). "ஓமந்தூர் வீற்றிருந்த பெருமாள்!". தினமணி. http://www.dinamani.com/weekly_supplements/vellimani/2014/09/11/ஓமந்தூர்-வீற்றிருந்த-பெரும/article2425998.ece.