வீழ்கட்டமைப்பு (கட்டிடம்)
கட்டடங்களை திட்டமிட்டமுறையில் சூழலியல் கோட்பாடுகளுக்கு இணைய கூறு கூறுகளாய் தகர்ப்பதை வீழ்கட்டமைப்பு (Deconstruction) எனலாம். வீழ்கட்டமைப்பு கட்டிடங்களை இடித்து தள்ளல் அல்லது அழித்தல் செயல்பாட்டில் இருந்து வேறுபடுகின்றது.
Environmental science |
---|
Environmental technology |
கட்டிடங்களை அகற்ற வேண்டிய தேவை
தொகுபயன்படுத்த முடியாது என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களை முற்றாகவோ அல்லது பகுதிகளையோ அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. உதாரணமாக ஈழத்தில் போரின் காரணங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. நிலம் மிகவும் பெறுமதியான சென்னை போன்ற நகரங்களில் குறைந்தளவு கொள்திறன் உள்ள அல்லது பழைய கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்களை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. மேலை நாடுகளில் கட்டிடங்களை அகற்றி புகு கட்டிட தொகுதிகளை அமைப்பது ஒரு வழமையான செயல்பாடு ஆகும். எனவே கட்டிடங்களை அகற்ற வேண்டிய தேவை என்றும் எங்கும் இருக்கின்றது.
கட்டிடங்களை அகற்றும் முறைகள்
தொகுபொதுவாக மேலை நாடுகளில் கட்டிடத்தை தகர்த்து அல்லது இடித்துத் தள்ளிவிடுவார்கள். பல கட்டிடங்கள் excavator மற்றும் bulldozer போன்றவற்றை பயன்படுத்தி தகர்ப்பர். கிரேன்களில் நாட்டப்பட்ட பாரிய தகர் பந்து (wrecking ball) கொண்டும் தகர்க்கப்படுவதுண்டு. மேலும், வெடிபொருட்கள் உபயோகித்தும் சில கட்டிடங்கள் தகர்க்கப்படுவதுண்டு. இம் முறைகள் விரைவாக பணியை செய்ய உதவினாலும் கட்டிடங்களை தகர்ப்பதற்கு பொதுவாக சிறந்த முறை இல்லை. வீழ்கட்டமைப்பு இவற்றை விட ஒரு சிறந்த முறையெனலாம்.
வீழ்கட்டமைப்பு நன்மைகள்
தொகு- கட்டிட பொருட்கள் மீள் உபயோகம்.
- கட்டிட பொருட்களை விற்பனைப்படுத்தல்.
- கழிவுகளை கட்டுப்படுத்தி சூழல் மாசுறுதலை தவிர்த்தல்.
- வீழ்கட்டமைப்பின் போது தொழிலாளர்கள் தொழில்வாய்ப்பு பெறல்.
வெவ்வேறு நாடுகளில் வீழ்கட்டமைப்பு
தொகுவெவ்வேறு நாடுகளில் வீழ்கட்டமைப்பு பல்வேறு நிலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கட்டிட கட்டல் தகர்த்தல் கழிவுகள் (Construction and Demolition Waste) கழிவு குழிகளில் (land fills) இடப்படுவதில் இருந்து எவ்வளவு வீதம் தடுக்கப்படுகின்றது என்பதை வைத்து வீழ்கட்டமைப்பு எவ்வளவு வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று உத்தேசமாக மதிப்பிடலாம். எனினும், சூழல், பண்பாட்டு போக்குகள், பொருளாதாரம், தொழில்நுட்பம், அரச கொள்கைகள் ஆகிய கூறுகளையும் ஆய்தே ஒரு நாட்டில் எந்த நிலையில் வீழ்கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை கணக்கிட முடியும்.
ஒழுங்கமைக்கப்பட்ட வீழ்கட்டமைப்பு (systematic deconstruction) செயல்பாடுகள் வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகள் சிலவற்றில் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வளர்சியடைந்துவரும் சில நாடுகளில் வீழ்கட்டமைப்பின் பல கூறுகள் சிறப்பாக நடைமுறையில் இருந்தாலும் அவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட வீழ்கட்டமைப்பு என்று கூற முடியாது.
வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளிலும் வீழ்கட்டமைப்பை அண்மையில் அறிந்து செயல்படுத்த முனையும் கனடா, நோர்வே, துருக்கி போன்ற நாடுகளையும் யப்பான், நெதர்லாந்து, ஐ.இரா போன்ற அதி நிலையில் நடைமுறைப்படுத்தியிருக்கும் நாடுகளுடன் ஒப்பிட்டு வேறுபாடுகள் காணலாம். உதாரணமாக, யப்பானில் வீழ்கட்டமைப்பு அவ்வரசின் "recycle oriented society" என்ற இலக்கின் ஒரு முக்கிய அம்சம். கனடாவில் அதன் பெரிய பரப்பளவு (கழிவு குழிகள் மலிவில் கிடைக்கும்), இயற்கை வளம் (மீள் உபயோக தேவை உடனடியாக உணரப்படுவதை தடுக்கின்றது) காரணமாக வீழ்கட்டமைப்பு மிகவும் ஆரம்ப நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
கலைச்சொற்கள்
தொகு- கட்டிட தகர்ப்பு, இடித்து தள்ளல் - Demolition
- அழித்தல் - Destruction
துணை நூல்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Deconstruction and Materials Reuse an International Overview பரணிடப்பட்டது 2006-01-10 at the வந்தவழி இயந்திரம்
- http://www.rebuildingcenter.org/
- http://www.deconstructioninstitute.com/ பரணிடப்பட்டது 2006-02-02 at the வந்தவழி இயந்திரம்
- http://www.jfe-holdings.co.jp/en/environment/pdf/2003/7-2.pdf பரணிடப்பட்டது 2006-01-03 at the வந்தவழி இயந்திரம்
- http://www.thereusecenter.com/
- Deconstruction: The first step in green building பரணிடப்பட்டது 2005-10-16 at the வந்தவழி இயந்திரம்
- A Guide to Deconstruction: An Overview of Destruction With a Focus on Community Development Opportunities பரணிடப்பட்டது 2006-02-18 at the வந்தவழி இயந்திரம்
- http://www.commongrounddeconstruction.org/ பரணிடப்பட்டது 2005-12-17 at the வந்தவழி இயந்திரம்
- Deconstruction Conference பரணிடப்பட்டது 2006-02-05 at the வந்தவழி இயந்திரம்
வீழ்கட்டமைப்பு வடிவமைப்பு
தொகு- Design and Detailing for Deconstruction பரணிடப்பட்டது 2005-08-21 at the வந்தவழி இயந்திரம்