வீழ்படிவு
வேதியியல் தாக்கமொன்றில் திரவத் தாக்கத்தொகுதியொன்றில் திண்மப் பொருள் படிவடைதல் அல்லது திண்மப் பிரிகையொன்றில் படிவுகள் தோன்றுதல் வீழ்படிவு எனப்படும். வீழ்படிவின் மேலாகக் காணப்படும் திரவம் மேற்றெளிநீர்மம் எனப்படும்.
புவியீர்ப்பு முதலான புறவிசைகள் காரணமாக குறித்த கால இடைவெளியில் திண்ம நிலை உருவாவதால் இயற்கை வீழ்படிவு முறைகளான படிவுறுதல் மற்றும் அடைதல் நிகழ்கிறது.வேதியியல் தாக்கங்களின் போது குறிப்பாக நீர்மப் பதார்த்தத்தினுள் கரையாத பதார்த்தங்கள் தோன்றுவதனாலும் அதன் செறிவு உயர்வாய் இருக்கும் போதும் தோன்றுகின்றது. கரையும் பதார்த்தத்தினுடன் கரையம் முழு நிரம்பல் நிலை அடைந்தால் வீழ்படிவாதல் தூண்டப்படும்.[1]
வீழ்படிவுக்கான முக்கிய காரணம்:
- கரைசலில் கரையத்தின் செறிவு அதன் கரைதிறனை விட அதிகரித்தல்.
மிகக்குறைவான கரைதிறன் உடைய பதார்த்தங்கள் இலகுவாக வீழ்படிவடைந்து விடும். வீழ்படிவாக முன்னர் வீழ்படிவாகும் அனைத்துப் பொருட்களும் நிரம்பிய நிலையிலிருந்தே (கரைசலில் கரையம் கரையக்கூடிய உச்ச அளவு) வீழ்படிவடையும்.
பயன்பாடு
தொகுநிறப்பொருட்களின் உருவாக்கம், நீரிலிருந்து உப்புக்களை அகற்றல், அசேதனப் பொருட்களை இனங்காணல் போன்ற செயன்முறைகளில் இரசாயன வீழ்படிவாக்கல் பயன்படுத்தப்படுகின்றது.[2]
உதாரணம்
தொகுசில இரசாயனத் தாக்கங்களின் போது வீழ்படிவுகள் உருவாகின்றன. இரசாயனத் தாக்கத்தின் போது கரைதிறன் மிகவும் குறைவான சேர்வைகள் உருவாவதே இதற்குக் காரணமாகும். வீழ்படிவாதல் தாக்கத்துக்கு உதாரணமாக ஈய நைத்திரேற்றுக் கரைசலுடன் பொட்டாசியம் அயோடைடுக் கரைசலைச் சேர்க்கும் போது நடைபெறும் வீழ்படிவாதல் தாக்கத்தை எடுத்துக்கொள்ளலாம்:
- Pb(NO3)2 (aq) + 2KI (aq) → PbI2 (s) + 2KNO3 (aq)
இத்தாக்கத்தில் உருவாகும் ஈய அயோடைடு நீரில் கரையாத சேர்வையாகும் (கரைதிறன் மிகவும் குறைவு). இதனை எம்மால் மஞ்சள் நிற வீழ்படிவாக அவதானிக்கலாம்.
உண்மையில் இத்தாக்கம் நடைபெறும் போது தாக்கத்தில் ஈடுபடும் சேர்வைகள் அயன்களாகவே காணப்படும். இவ்வாறு அயன்களுக்கிடையில் நடைபெறும் தாக்கத்தை முன்னிலைப்படுத்தி அயனிச் சமன்பாடு எழுதப்படும்.
- Pb2+ (aq) + 2NO3− (aq) + 2K+ (aq) + 2I− (aq) → PbI2 (s) + 2K+ (aq) + 2NO3− (aq)
மேலே எழுதப்பட்ட அயனிச் சமன்பாட்டின் இரு பக்கங்களிலும் தாக்கத்தில் ஈடுபடாத அயன்களை நீக்குவதன் மூலம் நிகர அயனிச் சமன்பாட்டை எழுதலாம். இதுவே வீழ்படிவாக்கல் தாக்கத்தின் போது உண்மையில் நடைபெறும் செயன்முறையை விளக்குவதாகும்.:
- Pb2+ (aq) + 2I− (aq) → PbI2 (s)
வீழ்படிவுகளின் நிறங்கள்
தொகுதங்கம் | செம்மஞ்சள் |
குரோமியம் | பச்சை, செம்மஞ்சள், ஊதா, மஞ்சள், கபிலம் |
கோபால்ட் | இளஞ்சிவப்பு |
செப்பு(II) | நீலம் |
இரும்பு (II) | பச்சை |
இரும்பு (III) | செங்கபிலம் |
மாங்கனீசு | வெளிர் இளஞ்சிவப்பு |
நிக்கல் | பச்சை |
மேற்கோள்கள்
தொகு- ↑ Dhara, S. (2007). "Formation, Dynamics, and Characterization of Nanostructures by Ion Beam Irradiation". Critical Reviews in Solid State and Materials Sciences 32 (1): 1–50. doi:10.1080/10408430601187624.
- ↑ Dupont, J., Consorti, C., Suarez, P., de Souza, R. (2004). "Preparation of 1-Butyl-3-methyl imidazolium-based Room Temperature Ionic Liquids". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=v79p0236.; Collective Volume, vol. 10, p. 184