வு யாங்யி
வு யாங்யி (Wu Yangjie) சீன நாட்டைச் சேர்ந்த கரிம வேதியியலாளர் ஆவார். செங்சௌ பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சீன அறிவியல் அகாதமியிலும் கல்வியாளராக இருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகு1928 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று சீனக் குடியரசின் சாந்தோங்கு மாகாணத்திலுள்ள இயினான் நகரத்தில் வு யாங்யி பிறந்தார். வு 1951 ஆம் ஆண்டு பியுதான் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றார், மேலும் அப் பல்கலைக்கழகத்திலேயே ஆசிரிய உறுப்பினராகவும் பணியமர்த்தப்பட்டார். மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் செப்டம்பர் 1954 இல், மாசுகோ மாநில பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் தனது அடுத்த நிலை பட்டதாரி படிப்பைத் தொடங்கினார். 1958 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் அங்கு முனைவர் பட்டத்திற்குச் சமமான இல் தனது இணை முனைவர் பட்டம் பெற்றார். [1]
சீனாவுக்குத் திரும்பிய பின்னர் வு புதிதாக நிறுவப்பட்ட செங்சௌ பல்கலைக்கழகத்திற்கு அதன் வேதியியல் துறையை நிறுவ உதவுவதற்காக நியமிக்கப்பட்டார். இங்குதான் வு யாங்யி தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார். பின்னர் இங்கேயே துறைத் தலைவராகவும், முனைவர் பட்ட ஆலோசகராகவும் தொடர்ந்து பணியாற்றினார். [2]
160 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வு வெளியிட்டார். 1978 ஆம் ஆண்டு தேசிய அறிவியல் காங்கிரசு விருதும் 2001 ஆம் ஆண்டில் எனன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்ற விருதும் வருக்கு வழங்கப்பட்டன. வு யாங்யி 2003 ஆம் ஆண்டில் ல் சீன அறிவியல் அகாதமியின் கல்வியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ding Kuiling (January 2018). "祝贺我国著名有机化学家、中国科学院院士吴养洁先生九十华诞". Chinese Journal of Organic Chemistry. பன்னாட்டுத் தர தொடர் எண்:0253-2786. http://www.cnki.com.cn/Article/CJFDTotal-YJHU201801001.htm. பார்த்த நாள்: 2019-02-09.
- ↑ 2.0 2.1 "吴养洁院士简介". Sina. 2003-11-26. பார்க்கப்பட்ட நாள் 2019-02-09.
- ↑ "吴养洁". Zhengzhou University. Archived from the original on 2019-02-09. பார்க்கப்பட்ட நாள் 2019-02-09.