வெட்சி
Ixora coccinea
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Gentianales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Ixora[1]

Ixora Pavetta in Hyderabad, India.
Ixora brachiata in Kinnerasani Wildlife Sanctuary, Andhra Pradesh, இந்தியா.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

வெட்சி (இட்டிலிப் பூ) என்பது ரூபியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். என்றும் பசுமையான மலர்ச்செடிகளான ரூபியேசியே குடும்பத்தில் 529 சிற்றினங்கள் காணப்படுகின்றன.[2]

உலகெங்கிலுமுள்ள அயன மண்டலம், உப அயன மண்டல நாடுகளில் தோன்றினாலும் அயன மண்டல் ஆசியா, குறிப்பாக இந்தியா இதன் பல்வகைமை செறிந்து காணப்படும் நாடாகும்.[2] இப்போது ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலும் வெட்சி வளர்க்கப்படுகிறது.

இத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு பொருத்தமான இத்தாவரம் பொன்சாய் செய்கைக்கு ஏற்றது.

சங்கநூற் செய்திகள்

தொகு

வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ.
இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.
இது ஊசி போல் அரும்பு விடும்.
வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ.
செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர்.

 • முருகக் கடவுள் தன் தலையிலே சூடும் கண்ணிமாலைகளில் ஒன்று இந்தச் செச்சை என்னும் வெட்சிப் பூவாலானது (செய்யன் ...கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் - திருமுருகாற்றுப்படை).
 • குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி.[3]
 • வெண்ணிற வெட்சி
வெட்சி மலர் வெள்ளை நிறத்தில் ஊசிபோல் பூக்கும். அதியமான் போர்க்கோலம் பூண்டபோது போந்தை(பனை), வெட்சி, வேங்கை ஆகிய மூன்று பூக்களையும் கலந்து கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருந்தான்.[4]
 • செந்நிற வெட்சி
முருகப்பெருமானை வழிபட்ட சூரர மகளிர் சூடியிருந்த மலர்களில் சிவந்த காம்பினைக் கொண்ட வெட்சியும் இருந்தது.[5]
 • காடைப் பறவையின் கால்நக முள் போல வெட்சிப்பூ முதிரும்.[6]
 • வெட்சிக்கானத்தில் வேட்டுவர் கடம்பு மானைத் துரத்திப் பிடிப்பர்.[7]
 • வையையில் நீரீடச் சென்ற மகளிர் வெட்சிப் பூவைத் தலையில் அணிந்திருந்தனர்.[8]
 • ஏறு தழுவச் சென்றபோது, இடையர் குலக் காளையர் சூடியிருந்த பன்மலர்க் கண்ணியில் வெட்சிப்பூ அதன் இலைகளுடன் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த்து.[9]
 • வெட்சித்திணையானது குறிஞ்சித்திணையின் புறத்திணை.[10]

இவற்றையும் காண்க

தொகு
சங்ககால மலர்கள்

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "Genus Ixora". Taxonomy. UniProt. பார்க்கப்பட்ட நாள் 2010-02-13.
 2. 2.0 2.1 "WCSP". World Checklist of Selected Plant Families. பார்க்கப்பட்ட நாள் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 3. குறிஞ்சிப்பாட்டு 63
 4. உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு வெட்சி மாமலர் - புறநானூறு 100-5
 5. செங்கால் வெட்சி - திருமுருகாற்றுப்படை 21
 6. இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி - அகநானூறு 133-14
 7. புறநானூறு 202-1
 8. ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் - பரிபாடல் 22-22
 9. புல்லிலை வெட்சி - கலித்தொகை 103-2
 10. தொல்காப்பியம் 3-59-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்சி&oldid=3032259" இலிருந்து மீள்விக்கப்பட்டது