வெட்டியான்

வெட்டியான் என்பது தமிழகத்தின் கிராமங்களில் பிணக்குழி தோண்டுபவரையும், பிணஞ்சுடுபவரையும் குறிக்கும் சொல் வழக்காகும். சுடுகாட்டிலே பிணஞ்சுடும் தொழிலைச் சிலர் பரம்பரையாகச் செய்து வருகின்றனர்[1]. இவர்கள் தீண்டாதார் வகுப்பு என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்குப் பிணம் சுடும் தொழிலுடன் கிராமக் காவல் தொழிலும் உண்டு. தமிழ்ப் பேரகராதி வெட்டியான் என்னும் சொல்லுக்கு ஓர்வகைக் கிராம ஊழியக்காரன் எனப் பொருள் கூறுகிறது. அதேவேளை யாழ்ப்பாண அகராதியை மேற்கோள்காட்டியே சவஞ் சுடுவோன் என்னும் பொருளையும் தருகிறது.[2]

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டியான்&oldid=2198750" இருந்து மீள்விக்கப்பட்டது