வெட்டி (வடிவவியல்)
வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் வெட்டி (cleaver) என்பது முக்கோணத்தின் சுற்றளவை இருசமக்கூறிடும் கோட்டுத்துண்டாகும். இக்கோட்டுத்துண்டின் ஒரு முனை முக்கோணத்தின் ஒரு பக்கத்தின் நடுப்புள்ளியாக இருக்கும். ஒரு முக்கோணத்திற்கு மூன்று வெட்டிகள் உள்ளன.
- ஒரு முக்கோணத்தின் ஒவ்வொரு வெட்டியும் அம் முக்கோணத்தின் ஒரு கோண இருசமவெட்டிக்கு இணையாக இருக்கும்[1]
- முக்கோணத்தின் மூன்று வெட்டிகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அவை மூன்றும் முக்கோணத்தின் ஸ்பைக்கர் வட்ட மையத்தில் சந்திக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- Ross Honsberger, "Cleavers and Splitters." Chapter 1 in Episodes in Nineteenth and Twentieth Century Euclidean Geometry. Mathematical Association of America, pages 1–14, 1995.