வெட்டு (கணக் கோட்பாடு)
கணிதத்தில் A , B ஆகிய இரு கணங்களின் வெட்டு அல்லது வெட்டு கணம் (intersection) A ∩ B என்பது, A , B இரண்டிலுமுள்ள பொதுவான உறுப்புகள் மட்டும் கொண்ட கணமாகும்.[1]
வரையறை
தொகுA , B கணங்களின் வெட்டுக்கான குறியீடு:
- x ∈ A மற்றும் x ∈ B என இருந்தால், இருந்தால் மட்டுமே, x ∈ A ∩ B.
அதாவது, A மற்றும் B இரண்டுக்கும் பொதுவான உறுப்பாக இருந்தால் மட்டுமே x ஆனது A ∩ B இன் உறுப்பாகும்.
எடுத்துக்காட்டு:
- A ={1, 2, 3}, B = {2, 3, 4} எனில், A ∩ B = {2, 3}.
- பகா எண்களின் கணம் {2, 3, 5, 7, 11, ...}, ஒற்றை எண்களின் கணம் {1, 3, 5, 7, 9, 11, ...} இரண்டின் வெட்டு கணத்தில் எண் 9 ஒரு உறுப்பாகாது.[2]
ஒரே சமயத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கணங்களுக்கும் வெட்டு காணமுடியும்.
- A, B, C, என்ற மூன்று கணங்களின் வெட்டு:
- A ∩ B ∩ C = A ∩ (B ∩ C)
- A, B, C, D என்ற நான்கு கணங்களின் வெட்டு:
- A ∩ B ∩ C ∩ D = A ∩ (B ∩ (C ∩ D)).
பண்புகள்
தொகு- A ∩ B என்னும் கணம் A , B இன் உட்கணம் ஆகும்.
- கணங்களின் வெட்டு காணும் செயல் பரிமாற்றுப் பண்பு உடையது
- கணங்களின் வெட்டு காணும் செயல் சேர்ப்புப் பண்பு உடையது
- த மோர்கனின் விதிப்படி, A , B கணங்களின் வெட்டு கணமானது, அக்கணங்களின் நிரப்பு கணங்களின் ஒன்றிப்பின் நிரப்பு கணமாக இருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Stats: Probability Rules". People.richland.edu. பார்க்கப்பட்ட நாள் 2012-05-08.
- ↑ How to find the intersection of sets
மேலும் படிக்க
தொகு- Devlin, K. J. (1993). The Joy of Sets: Fundamentals of Contemporary Set Theory (Second ed.). New York, NY: Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-94094-4.
- Munkres, James R. (2000). "Set Theory and Logic". Topology (Second ed.). Upper Saddle River: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-181629-2.
- Rosen, Kenneth (2007). "Basic Structures: Sets, Functions, Sequences, and Sums". Discrete Mathematics and Its Applications (Sixth ed.). Boston: McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-322972-0.
வெளியிணைப்புகள்
தொகு- Weisstein, Eric W., "Intersection", MathWorld.