வெண்கல ஓநாய் விருது

வெண்கல ஓநாய் விருது (Bronze Wolf Award) என்பது உலக சாரணர் இயக்கத்திற்கு உயரிய பங்களிப்பு வழங்கும் ஒருவருக்கு உலக சாரணர் குழு வழங்கும் ஓர் உயரிய விருதாகும்.[1] இது உலகின் தன்னார்வமிக்க சாரண தலைவருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமான விருதாகும்.[2][3] உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான சாரணர்களில் 400 க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. உலக சாரணர் குழு 1935ஆம் ஆண்டு ஆகத்து 2 ஆம் நாள் இவ்விருதை வழங்கத் தொடங்கியது.

வெண்கல ஓநாய்
நாடுஉலகளவில்
நிறுவப்பட்டல்ஆகஸ்டு 2, 1935
நிறுவுநர்சாரண இயக்கத்தின் உலக நிறுவனம்
விருதுகள்சாரணர் இயக்கத்திற்கு உயரிய பங்களிப்பு
Membership350 (2016)
Scouting portal

தகுதிகள்

தொகு

அசாதாரண சேவை செய்த, குறிப்பிடத்தக்கப் பணியை சாரண இயக்கத்திற்கு ஆற்றிய சாரண தலைவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தன்னார்வ சேவை, அர்ப்பணிப்பு, வெற்றிகரமான வழிகாட்டுதல் ஆகியவற்றை சாரண இயக்கத்திற்கு வழங்கிய நபரே தகுதி உடையவர் ஆவார்.[4]

1935-1955 காலப்பகுதியில் 12 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. 1955-2015 ஆண்டுகளுக்கிடையில் 346 நபர்களுக்கும் 2016ல் 7 நபர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. இந்தோனேசியா துணை அதிபர் கெமங்கேகுவானோ,[5][6] சுவீடனின் கார்ல் கெசுடாப், தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச், பிலிப்பீன்சு அதிபர் பிடெல் ராமோசு ஆகியோர் வெண்கல ஓநாய் விருது பெற்ற முக்கிய நபர்கள் ஆவர்.

விளக்கம்

தொகு

வெண்கல ஓநாய் விருது அடர் பச்சை நிற நாடாவை விளிம்பாகக் கொண்டு இரண்டு குறுகிய மஞ்சள் நிற கோடுகள் கீழிறங்குமாறு சாரணச் சின்னத்துடன் அமைந்துள்ளது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Bronze Wolf". World Scout Bureau. 2015. Archived from the original on 2021-02-13. பார்க்கப்பட்ட நாள் 2017-08-19.
  2. Haru Matsukata Reischauer (1986). Samurai and Silk: A Japanese and American Heritage. Harvard University Press. pp. 317–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-78801-5.
  3. "Scouting Award Presented to President Thomas S. Monson - Ensign Nov. 1993". www.lds.org. பார்க்கப்பட்ட நாள் 16 December 2016.
  4. "Awards & Recognition in the Scouting Program" (PDF). Monmouth Council. Archived from the original (PDF) on 22 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 16 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Ratna, Dewi (31 May 2016). "Prestasi keren Bapak Pramuka Indonesia, Sri Sultan Hamengkubuwono IX | merdeka.com". merdeka.com (in Indonesian). பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. Hasist, Mohamad (14 August 2012). "Mengenang Bapak Pramuka Indonesia | merdeka.com". merdeka.com (in Indonesian). பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. Tupchai, Suchada (1–7 July 2006). "His Majesty the King receives World Scout's highest award". Chiangmai Mail.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்கல_ஓநாய்_விருது&oldid=3572281" இலிருந்து மீள்விக்கப்பட்டது