வெண்டைப் பொரியல்

 

வெண்டைப் பொரியல்
சமைக்கப்பட்ட வெண்டைப் பொரியல்
தொடங்கிய இடம்இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், டிரினிடாட் மற்றும் டொபாகோ
பகுதிஇந்தியத் துணைக்கண்டம், கரிபியன் பகுதிகள்
முக்கிய சேர்பொருட்கள்வெண்டை, எண்ணெய் , மசாலாப் பொருள்
Ingredients generally usedகறிவேப்பிலை

வெண்டைப் பொரியல் ( ஒக்ரா பொரியல், வெண்டி பொரியல், வெண்டி கறி அல்லது பர்வான் வெண்டி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது வெண்டைக்காயை சம அளவில் வெட்டி, வாணலியில் கிளறி-வறுத்து தயாரிக்கப்படும் ஒரு உணவு ஆகும். கரம் மசாலா மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பிற மசாலாப் பொருட்கள் சேர்த்த மசாலா கலவையைப் பயன்படுத்தி இவ்வுணவுப் பொருள் தயாரிக்கப்படுகிறது.

இந்த உணவுப் பொரும் சிறிதளவே எண்ணெய் விட்டு கிளறியோ, வதக்கியோ தயாரிக்கப்படும். வெண்டை வறுவலுக்கும் இதற்கும் முகுந்த வேறுபாடு காணப்படும், வறுவல் நீண்ட நேரமாக வாணலியில் வறுத்து தயாரிக்கப்படும் ஒன்றாகும்

வேகவைத்த சோறு மற்றும் பருப்புடன் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடும் தொடு உணவாகவும் இதை பரிமாறி உண்ணலாம்.[1]

தயாரிப்பு முறை தொகு

சாப்பிடத் தேவையான அளவு வெண்டைக்காய்களை சம அளவில் வெட்டி ஈரம் முழுவதும் காய்ந்த பின்னர், வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு பின்னர் பெரிய அல்லது சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இவையெல்லாம் பொன்னிறமாக வந்த பின்னர் வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயை உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்க வேண்டும். அதோடு தேவையான கரம் மசாலா அல்லது கறி மசாலாக்கள் சேர்த்து வேகும் வரையில் வதக்கினால், இந்த வெண்டைப் பொரியல் தயாரித்துவிடலாம்.

வெளி இணைப்புகள் தொகு

  1. "சத்துணவு! - வெண்டை சீஸ் பொரியல்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்டைப்_பொரியல்&oldid=3890619" இலிருந்து மீள்விக்கப்பட்டது