வெண்ணிப் பறந்தலை

வெண்ணிப் பறந்தலை என்பது சங்ககாலப் போர்க்களங்களில் ஒன்று. வெண்ணி என்னும் ஊரை அடுத்து இப்போர்க்களம் அமைத்துக் கொள்ளப்பட்டது.

வெண்ணிப் பறந்தலையில் நடந்த போர் தொகு

  • கரிகால் வளவன் | சேரலாதன்
கழாத்தலையார் - புறம் 65
மாமூலனார் - அகம் 55
வெண்ணிக் குயத்தியார் - புறம் 66

வெண்ணிப் பறந்தலையில் பெருஞ்சேரலாதன் கரிகால் வளவனைத் தாக்கினான். கரிகாலன் தன் வலிமையையெல்லாம் காட்டி எய்த அம்பு சேரலாதனின் மார்பில் பாய்ந்து முதுகுப்பக்கமாக ஓடிவிட்டது. சேரலாதன் முதுகில் பட்ட புண்ணுக்காக நாணினான். முதுகுப் புண்ணோடு மேலும் போரிட விரும்பவில்லை. போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் நீத்தான்.

இன்னா இன்னுரை தொகு

முதுகில் புண் இன்னா உரை.
சேரலாதன் போர்க்களத்தில் வாள்வடக்கிருந்து உயிர் நீக்கிக்கொண்டது இன்னுரை.

சான்றோர் வடக்கிருந்தது தொகு

இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்(சேரலாதனின் படைவீரர்கள்) தாமும் சேரலாதனுடன் வீடுபேறு அடைய விரும்பி அந்தப் போர்க்களத்தில் அவனுடன் சேர்ந்து வாள்வடக்கு இருந்து பெரும்பிறிது ஆயினர்.(உயிர் நீத்தனர்)

உவமை காட்டும் பொருள் தொகு

தலைவி சொல்கிறாள். அவர் பொருள் செயச் சென்றார். அவருடன் நானும் சென்றிருக்கவேண்டும். சேரலாதனுடன் சேர்ந்து வாள்வடக்கிருந்த சான்றோர் போலச் சென்றிருக்க வேண்டும். செல்லாமல் கொல்லன் ஊதும் உலைக் குருகு போல என் நெஞ்சம் பெருமூச்சு விடுவது நன்றன்று, என்கிறாள்.

நல்லவன் யார் தொகு

கரிகாலன் எய்தான். வென்றான். நல்லன்.
சேரலாதன் புறப்புண் நாணி வாள்வடக்கு இருந்து உயிர் நீத்தான். புறப்புண் நாணியவன் எய்தவனைக் காட்டிலும் நல்லவன். - இது வெண்ணிக் குயத்தியார் கருத்து.

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணிப்_பறந்தலை&oldid=2780236" இலிருந்து மீள்விக்கப்பட்டது