வெண்ணிவாயில்
வெண்ணிவாயில் என்பது சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய ஊர்களுள் ஒன்று. பரணர் பாடல் (அகநானூறு 246) இதனைக் குறிப்பிடுகிறது.
வெண்ணிப் பறந்தலையில் நடந்தது போலவே வெண்ணிவாயில் என்னும் ஊரிலும் போர் நடந்தது. இவ்வூர் நறவுக் கள்ளுக்குப் பெயர்பெற்றது.
இவ்வூரில் கரிகாலனை 11 வேளிர் மன்னர்கள் ஒன்றுதிரண்டு தாக்கினர். அவர்கள் அனைவரும் கரிகாலனை எதிர்த்துநிற்க மாட்டாமல் போர்க்களத்திலேயே மாண்டனர். அவர்கள் முழக்கிய முரசுகள் மட்டுமே போர்க்களத்தில் எஞ்சிக் கிடந்தன.
இதனைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சியில் பூரித்து ஆரவாரம் செய்தனர்.
இவர்களின் ஆரவாரம் போலத் தலைவியின் அலர் பரவலாகப் பேசப்பட்டது என்கிறார், பரணர்.