அழுந்தூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அழுந்தூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் ரயில்நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்காத்தில் இந்த ஊர் தேரழுந்தூர் என்னும் பெயருடன் விளங்கிவருகிறது.
திருநாவுகரசர் இந்தத் திருவழுந்தூர்க் கோயில் கொண்டுள்ள சிவபருமானைப் போற்றிப் பாடியுள்ளார்.
கம்பராமாயணம் பாடிய கம்பர் இவ்வூரில் பிறந்தவர்.
அழுந்தூர் என்பது சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று. புலவர் பரணர் இதனைத் தம் பாடலில் (அகநானூறு 245) குறிப்பிட்டுள்ளார்.
வெண்ணிவாயில் என்னுமிடத்தில் வேந்தன் கரிகாலனை 11 வேளிர் ஒன்று கூடித் தாக்கினர். இவர்கள் 11 பேரும் போர்க்களத்திலேயே மாண்டனர். போர்களத்தில் அவர்களது முரசங்கள் மட்டுமே எஞ்சிக் கிடந்தன.
இவற்றைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த ஆரவாரம் போலத் தலைவியின் அலர் எங்கும் பரவிற்றாம்.