வெண்ணெய்மலை முருகன் கோயில்
வெண்ணைமலை முருகன் கோயில் (VennaimalaiMurugan temple) இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் புறநகரில் உள்ள வெண்ணைமலை கிராமத்தில் உள்ளது. பாலசுப்ரமணியசுவாமி கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்துக் கடவுளான முருகனுக்காக கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இக்கோயில் கரூர் - புகளூர் சாலையில் அமைந்துள்ளது. கோயிலின் புராணக்கதை காமதேனு இந்துக் கடவுளான பிரம்மாவின் கடமைகளை ஏற்று வெண்ணைமலை என்ற வெண்ணெய் மலையை உருவாக்கியதுடன் தொடர்பு கொண்டுள்ளது.
சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாக நம்பப்படும் இத்திருக்கோவிலை கருவூர் அரசர் அமைத்தார் என சொல்லப்படுகிறது. கோவிலில் ஓர் உயர்ந்த கட்டமைப்பு, மூன்று அடுக்கு நுழைவாயில் கோபுரம், கருவறைக்கு வழிவகுக்கும் கோயில் கோபுரம் ஆகியவை உள்ளன. கோவில் காலை 6:30 முதல் 12:00 மணி வரையிலும் மாலை 5 - 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவிலில் நான்கு தினசரி பூசைகளும் பல ஆண்டு விழாக்களும் நடத்தப்படுகின்றன. பங்குனி உத்திரம் திருவிழா தமிழ் மாதமான பங்குனியிலும் (மார்ச் - ஏப்ரல்), தை பூசத் திருவிழா சனவரி - பிப்ரவரி மாதங்களிலும், கார்த்திகைத் திருவிழா நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய வாரியத்தால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
புராணம்
தொகுஇந்து புராணத்தின் படி, பிரம்மா, படைப்புத் தொழில் செய்யும் இந்து கடவுள் தனது தொழிலைப் பற்றி மிகவும் கர்வம் கொண்டிருந்தார். சிவன் அவருக்கு பாடம் கற்பிக்க விரும்பினார். பிரம்மாவால் ஒரு கட்டத்தில் அதிக சுமையால் தனது தொழிலைத் தொடர முடியவில்லை. தன் தவறை உணர்ந்து சிவனிடம் நிவாரணம் கோரி வேண்டினார். முருகனை வேண்டி தவம் செய்ய சிவன் அவரை வஞ்சிமலைக்கு அனுப்பினார். தெய்வீக பசுவான காமதேனு பூமியில் உயிரினங்களை உருவாக்க பிரம்மாவின் பாத்திரத்தை ஏற்றது. பசு வெண்ணெய் ( தமிழில் வெண்ணை என்றும் அதன் பாலுடன் புனிதமான தொட்டி என்றும் அழைக்கப்படும் ) மலையை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. அந்த மலையில் பகவான் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். திடீரென அவர் முருகனின் தரிசனம் பெற்று கரூர் அரசருக்கு தகவல் தெரிவித்தார். அரசன் உடனே முருகனுக்கு கோயில் கட்டி, சமுக யந்திரத்தை வைத்து, காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சி சிலைகளை நிறுவினார்.[1]
கட்டடக் கலை
தொகுகோயில் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கரூர் புறநகர்ப் பகுதியில் உள்ள வெண்ணைமலையில் கரூரிலிருந்து வெண்ணைமலை செல்லும் சாலையில் அமைந்துள்ளது.[2]கோவிலில் ஓர் உயரமான கட்டட அமைப்பும் மூன்று அடுக்கு இராசகோபுரமும் கருவறைக்கு செல்லும் நுழைவாயில் கோபுரமும் அமைந்துள்ளன. மலையின் அடிவாரத்தில் கருவறையின் அச்சில் உயரமான கருங்கற் தூண் உள்ளது. கருவறையில் பாலசுப்ரமணியசுவாமியின் திருவுருவம் உள்ளது. கருவறையை நோக்கிய வடமேற்கு சன்னதியில் பாலசுப்ரமணியசுவாமியின் பெற்றோரான காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சியின் திருவுருவங்கள் உள்ளன. மலையடிவாரத்தில் கிழக்கு நோக்கிய விநாயகர் சன்னதி உள்ளது. கோயில் குளம், தேனு தீர்த்தம் கோயிலுக்கு வெளியே அமைந்துள்ளது.[3]கோயிலின் எதிரே முன்புறமாக விளக்குத் தூண் அமைந்துள்ளது. இக்கோயிலில் இடும்பன், விநாயகர், மலைக்காவலர் சன்னதிகள் உள்ளன. படிகளைக் கடந்து உள்ளே செல்லும்போது உச்சியில் விசுவநாதர், விசாலாட்சி, கருவூரார், பாலசுப்பிரமணியசுவாமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. பாலசுப்பிரமணியசுவாமி சன்னதிக்கு முன்பாக கொடி மரம், பலிபீடம், மயில் ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் கன்னி விநாயகர், பஞ்சமூர்த்தி, பைரவர் ஆகியோர் உள்ளனர். நவக்கிரகங்களின் சன்னதியும் உள்ளது. நவீன காலத்தில், கரூர் மாவட்ட நிர்வாகம் இக்கோயிலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கண்டறிந்துள்ளது.[4]
திருவிழாக்கள்
தொகுகோயில் பூசாரிகள் நாள்தோறும் வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள். திருவிழாக் காலங்களிலும் பூசை சடங்குகள் நடைபெறுகின்றன. கோவில் சடங்குகள் ஒரு நாளைக்கு நான்கு முறை செய்யப்படுகின்றன. காளசந்தி பூசை 8:00 மணிக்கும் 12:00 மணிக்கு உச்சிகால பூசையும், மாலை, 6:00 மணிக்கு சாயரக்சை பூசையும், இரவு 8:15 மணிக்கு அர்த்தசாம பூசையும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு சடங்குக்கும் மூன்று படிநிலைகள் உள்ளன: அலங்காரம் (அலங்காரம்), நெய்வேதனம் (உணவு பிரசாதம்) மற்றும் பிரதான தெய்வங்களுக்கு தீப ஆராதனை (விளக்குகளை அசைத்தல்) போன்றவை இப்படிநிலைகளாகும். கோவிலில் வாராந்திர, மாதாந்திர மற்றும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை விசேட சடங்குகள் செய்யப்படுகின்றன. பண்டிகைக் காலங்கள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் காலை 6:00 - மதியம் 12:00 மற்றும் மாலை 5 - 8:30 மணி வரை கோயில் திறந்திருக்கும். கோவிலின் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா தமிழ் மாதமான பங்குனியிலும் (மார்ச் - ஏப்ரல்), தை பூசம் (சனவரி - பிப்ரவரி) மற்றும் கார்த்திகை நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நிகழ்கின்றன.[1]கோயிலில் 2006 ஆம் ஆண்டு முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது, இங்கு இந்து சமய மற்றும் அறநிலைய வாரியத்தின் ஏற்பாடுகளுடன் தினமும் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Sri Balasubramaniyaswamytemple". Dinamalar. 2011. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
- ↑ India. Office of the Registrar General (1965). Census of India, 1961: Madras Volume 9, Issue 1 of Census of India, 1961, India. Office of the Registrar General. Manager of Publications.
- ↑ "VennaimalaiMurugan temple". Malaaimalar. 6 July 2015. Archived from the original on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
- ↑ "Tourist places". Karur district administration, Government of Tamil Nadu. 2011. Archived from the original on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.
- ↑ "Govt. extends annadhanam scheme to 18 more temples". The Hindu. 14 January 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/govt-extends-annadhanam-scheme-to-18-more-temples/article3239926.ece. பார்த்த நாள்: 26 November 2015.