வெப்ப ஒளிர்வு கதிர் ஏற்பளவுமானி
வெப்ப ஒளிர்வு கதிர் ஏற்பளவுமானி (Thermoluminescence dosimeter), என்பது கதிர் வீச்சின் அளவினை கண்டறிய உதவும் ஒரு கருவியாகும்.
செயல்படும் முறை
தொகுலித்தியம் புளூரைட் (Lithium fluoride), கால்சியம் சல்பேட்டு போன்ற சில படிகங்கள் அயனியாக்கும் கதிர் வீச்சிற்கு ஆட்படும் போது, அக்கதிரிலிருந்து ஆற்றலை ஏற்றுக் கொள்கிறது. இப்படிகங்களை பின்னால் சூடாக்கும் போது அவைகள் ஒளியை வெளியிடுகின்றன. வெளிப்படும் ஒளியின் அளவு ஏற்றுக் கொண்ட கதிர் வீச்சிற்கு நேர்விகிதத்தில் உள்ளது. குறைந்த ஏற்பளவு, குறைந்த அளவு ஒளியினையும்; அதிக ஏற்பளவு, அதிக ஒளியினையும் கொடுக்கும். படிகங்களைச் சூடேற்றுவதால் பெறப்படும் ஒளியினை ஒளிபெருக்கியின்(Photo multiplier tube) மூலம் அதிகரிக்கலாம். இன்றைய அறிவியல் இவ்வொளியினை கதிர் ஏற்பளவாக கொடுத்து விடுகிறது.
கதிர்வீச்சுப் புலங்களில் பணிபுரிகிறவர்கள், பணியின் போது பெறும் அளவினைக் காண இதனைப் பயன் படுத்துகிறார்கள். புற்றுதிசுக்களிலும் பிற முக்கியமான உடலுறுப்புகளிலும் கதிர் ஏற்பளவினைக் காணப்பயன்படுகிறது.
வெளி இணைப்புகள்
தொகு- வெப்ப ஒளிர்வு கதிர் ஏற்பளவுமானி பயன்படுத்தி செய்யும் சிகிச்சை முறை பப்மெட் சென்ட்ரல் தளத்தில்.