வெள்ளிமலை (இதழ்)
வெள்ளிமலை இலங்கை, வலிகாமம் பிரதேசத்திலிருந்து 2007ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மும்மாசிகை இதழாகும்.
பணிக்கூற்று
தொகுவலிகாமம் பிரதேச வளங்கள், திறன்கள் வெளிக்காட்டிடும் சஞ்சிகை
வெளியீடு
தொகுவலிகாமம் தெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொதுநூலகம், உடுவில் பொது நூலகம், ஏலாழை பொது நூலகம் இவற்றின் வாசகர் வட்ட வெளியீடு. முதல் இதழ் சித்திரை, ஆடி இதழாக 2007ம் ஆண்டில் வெளிவந்துள்ளது.
இணையாசிரியர்கள்
தொகு- க.சௌந்தரராஜன்
- கு.பா.விஜயகுமார்
தொடர்பு முகவரி
தொகு- நூலகர், சுன்னாகம் பொதுநூலகம், சுன்னாகம்
- நூலகர், உடுவில் பொதுநூலகம், மருதனாமடம்
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் கட்டுரைகள், நகரங்கள் பற்றிய சிறு குறிப்புகள், நினைவு குறிப்புகள், கவிதைகள், தத்துவக் கருத்துகள், துணுக்குகள், அறிவியல் கட்டுரைகள், சிறுகதைகள், நூலகவியல் தொடர்பான கட்டுரைகள், கல்விசார் கட்டுரைகள், செவ்விகள், குறுக்கெழுத்துப் போட்டி போன்ற பல்வேறு அம்சங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. ஆரம்ப இதழ் 66 பக்கங்களில் வெளிவந்தது.