வெள்ளிமலை (எழுத்தாளர்)
வெள்ளிமலை (பிறப்பு: நவம்பர் 18, 1937) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். "வரதராசன். ந", எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் அச்சகப் பணியாளராகவும், ஓய்வு பெற்ற தோட்ட மேலாளராகவும் இருந்துள்ளார். அத்துடன் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் அடிநாள் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1953 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இருநூறு வானொலி நாடகங்கள் எழுதியுள்ள இவர் மலேசிய எழுத்தாளர்களைப் பேட்டி கண்டு தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
தொகு- "நெஞ்சில் பூத்த மலர்" (நாவல் - 1986);
- "வாழ்வில் வசந்தம்" (சிறுகதைத் தொகுப்பு - 2001).
பரிசில்களும், விருதுகளும்
தொகு- பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்க விருது (1980)
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க விருது (1982)
- "சிறுகதைச் செம்மல்" விருது - தைப்பிங் தமிழ் எழுத்தாள்ர் வாசகர் இயக்கம் (1990)
- சங்கிலிமுத்து-அங்கம்மா விருது - தலைநகர் பாரதிதாசன் இயக்கம் (2001)