வெள்ளியின் வளிமண்டலம்

1761-ஆம் ஆண்டில் மிக்காயில் லோமொநோசொவ் எனும் ரஷியர் , வெள்ளி கோளிற்கு வளிமண்டலம் இருப்பதை கண்டறிந்தார்[1][2]. அதன் வளிமண்டலம் பூமியினதை விட சூடானது மற்றும் அடர்த்தியானது. அதன் நில வெப்பநிலை 740 K(467 °C, 872 °F) மற்றும் அழுத்தம் 93 பார் ( 1 bar = 100 கிலோபாஸ்கல்; 1 atmosphere = 1.01325 bar). வெள்ளியின் வளிமண்டலத்தில் ஒளிப்புகாத கந்தக அமிலம் கொண்ட மேகங்கள் உள்ளதால், அதன் நிலப்பரப்பை தொலைநோக்கி மூலம் பார்க்க இயலாது. வெள்ளியின் நிலப்பரப்பைப் பற்றிய தகவல்கள் முற்றிலும் ரேடார் இமேஜிங் மூலமே பெறப்பட்டன. வெள்ளியின் முக்கிய வளிமண்டல வாயுக்கள் கரியமில வாயு மற்றும் நைதரசன். வெள்ளியின் வளிமண்டலம் மிக வேகமாக சுழன்று வருகிறது.ஒட்டுமொத்த வளிமண்டலம் அக்கோளை நான்கு பூமி நாட்களில் சுற்றிவிடுகிறது.[3] நொடிக்கு நூறு மீட்டர் எனும் வேகத்தில் காற்று அங்கே வீசுகிறது. ஆனால் நிலபரப்பை நெருங்க நெருங்க , காற்றின் வேகம் குறைந்து , நிலப்பரப்பில் ஒரு மணி நேரத்துக்கு பத்து கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது[4].

வெள்ளி கோளின் வளிமண்டலம்
Cloud structure in Venus' atmosphere, revealed by ultraviolet observations. The characteristic V-shape of the clouds is due to the higher wind speed around the equator.
Cloud structure in Venus' atmosphere, revealed by ultraviolet observations. The characteristic V-shape of the clouds is due to the higher wind speed around the equator.

வெள்ளி கோளில் மேக அமைப்புகள்

பொது தகவல்
உயரம் 250 km
சராசரி நில அழுத்தம் (92 பார் or) 9.2 MPa
எடை 4.8 × 1020 kg
கலப்பளவு
கரியமில வாயு 96.5 %
நைதரசன் 3.5 %
கந்தக இருஆக்ஸைடு 150 ppm
ஆர்கான் 70 ppm
நீராவி 20 ppm
கார்பன் மோனாக்சைடு 17 ppm
ஹீலியம் 12 ppm
நியோன் 7 ppm
ஐதரசன்குளோரைட்டு 0.1–0.6 ppm
ஐதரசன் புளோரைட்டு 0.001–0.005 ppm

மேற்கோள்கள் தொகு

  1. Marov, Mikhail Ya. (2004). "Mikhail Lomonosov and the discovery of the atmosphere of Venus during the 1761 transit". Proceedings of the International Astronomical Union (Cambridge University Press) 2004 (IAUC196): 209–219. doi:10.1017/S1743921305001390. http://adsabs.harvard.edu/abs/2005tvnv.conf..209M. 
  2. Britannica online encyclopedia: Mikhail Vasilyevich Lomonosov
  3. Svedhem, Hakan; Titov, Dmitry V.; Taylor, Fredric V.; Witasse, Oliver (2007). "Venus as a more Earth-like planet". Nature 450 (7170): 629–632. doi:10.1038/nature06432. பப்மெட்:18046393. Bibcode: 2007Natur.450..629S. 
  4. DK Space Encyclopedia: Atmosphere of Venus p 58.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளியின்_வளிமண்டலம்&oldid=3777930" இலிருந்து மீள்விக்கப்பட்டது