வெள்ளுர் நடுநக்கர் திருக்கோவில்
வெள்ளூர் நடுநக்கர் திருக்கோவில்
தொகுபழம்பெரும் சிறப்பினைப் பறைசாற்றும் பாங்கான ஊர் வெள்ளூர். ஸ்ரீவைகுண்டம் அருகில் அமைந்துள்ள சிறப்பான இவ்வூரில் பசுமைபடர்ந்த வயல்வெளிகளுக்கு இடையே பொங்கும் புனல்சூழ் சுனைநீர் ததும்பும் தெப்பக்குளத்தின் பின்பக்கம் தேர்ச்சி மிகுந்த கலைவண்ணச்சிலைகளுடன் காட்சிதரும் சிவன்கோவில் கற்பனைக்கு எட்டாத அற்புதம். செந்தூர் அழகன், செவ்வேள் முருகன் வெள்ளூர் நடுநக்கர் எனும் சிவபெருமானை பூஜை செய்து வழிபட்ட காரணத்தால் “வேல் ஊர்” என்பது வெள்ளூர் என மருவி அழைக்கப்படுவதாகக் கூறுவர்.[1]
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள வெள்ளூர் நடுநக்கர் ஆலயமும் நவலிங்கபுரத் திருத்தலங்களில் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
இரண்டு சிவநெறிச் செல்வர்களுக்கிடையில் ஏற்பட்ட வழக்கில் துறவி வேடத்தில் வந்து ஈசன் இனிய தீர்ப்பு வழங்கிய காரணத்தால் வெள்ளூர் இறைவன் ‘மத்தியபதீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இதற்கிணையான தமிழ்சொல்லில் “நடுநக்கர்” என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார் வெள்ளூர் வேந்தர் ‘மத்தியபதீஸ்வரர்’.
சிவராத்திரிநாளில் நவலிங்கபுர தரிசனம் காணவருவோர் வெள்ளூரில் அமைந்துள்ள இந்த சிவாலய இறைவனை வணங்கிச் சென்றால் வடநக்கர், நடுநக்கர் என்ற இரண்டு சிவபெருமானின் அருள்கிட்ட சிந்தை குளிரும், வாழ்வில் சிறப்புகள் மிளிரும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "வெற்றியை வாரி வழங்கும் வெள்ளூர் நடுநக்கர்". www.dailythanthi.com. தினத்தந்தி. பார்க்கப்பட்ட நாள் 20 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)