வெ. இலட்சுமிபாய்
வெங்கட்ராமன் இலட்சுமிபாய் (Venkatraman Lakshmibai) என்பவர் ஓர் இந்தியக் கணிதவியலாளர் ஆவார். போசுட்டனிலுள்ள வடகிழக்குப் பல்கலைக் கழகத்தில் இவர் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இயற்கணிதக் குழுக்கள் மற்றும் பிரதிநிதித்துவக் கோட்பாடு குறித்த இயற்கணித வடிவியல் பிரிவில் இவர் ஆய்வுகள் மேற்கொண்டார் [1]:{{{3}}}. குறிப்பாக இவற்றில் சுகூபெர்ட் வகைகள் மற்றும் கொடி வகைகள் உள்ளிட்டவை அடங்கும்.
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் இலட்சுமிபாய் 1976 ஆம் ஆண்டு சாரா பில்லேயுடன் சேர்ந்து தன்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றார் [1]:{{{3}}}. அவர் சுகூபெர்ட் வகைகள் தனிக்கட்டுரையின் இணை ஆசிரியர் ஆவார் [2]:{{{3}}}. மேலும், இவர் யசுட்டின் பிரௌனுடன் சேர்ந்து இரண்டு கொடி வகைகள் வகை தனிக் கட்டுரைகளுக்கு இணை ஆசிரியராக இருந்தார். வடிவியலிம் இரு திசைப்பயன் விளைவு [3]:{{{3}}}, சேர்வியல் மற்றும் பிரதிநிதித்துவ கோட்பாடு, கிராசுமேனியன் வகை வடிவியல் மற்றும் பிரதிநிதித்துவம் –கோட்பாட்டு அம்சங்கள் என்பவை அவ்விரண்டு தனிக்கட்டுரைகளாகும் [4]:{{{3}}}. 2012 ஆம் ஆண்டில் அமெரிக்க கணிதவியல் சங்கத்தின் தொடக்க உறுப்பினர்களில் ஒருவராக இலட்சுமிபாய் தேர்ந்தெடுக்கப்பட்டார் [5]:{{{3}}}.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Venkatraman Lakshmibai", Faculty profiles, Northeastern University, பார்க்கப்பட்ட நாள் 2017-08-18
- ↑ Review of Singular Loci of Schubert Varieties by Michel Brion (2001), வார்ப்புரு:MR
- ↑ Review of Flag Varieties: An Interplay of Geometry, Combinatorics, and Representation Theory by Christian Ohn (2010), வார்ப்புரு:MR
- ↑ Review of The Grassmannian Variety: Geometric and Representation-Theoretic Aspects by Li Li, வார்ப்புரு:MR
- ↑ List of Fellows of the American Mathematical Society, பார்க்கப்பட்ட நாள் 2017-08-18
புற இணைப்புகள்
தொகு- கணித மரபியல் திட்டத்தில் Venkatramani Lakshmibai
- Home page[தொடர்பிழந்த இணைப்பு]