வெ. கோவிந்தன்

தமிழக அரசியலவாதி

வெ. கோவிந்தன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 தேர்தல்களில், திராவிட முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளராக, பேரணாம்பட்டு தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியானது, ஆதிதிராவிடர் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது.[1]

வாழ்க்கை

தொகு

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டைச் சேர்ந்தவரான ஆசிரியர் வெ. கோவிந்தன் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர். ஒரு கட்டத்தில் ஆசிரியர் பணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து பணியாற்றினார். 1989-91 மற்றும் 1996-2001 காலக்கட்டத்தில் பேரணாம்பட்டு தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற ஊறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவில் மாவட்ட துணைச் செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.[2]

மறைவு

தொகு

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்டோபர் 23, 2021 அன்று மாரடைப்பால் காலமானார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. "பேரணாம்பட்டு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மறைவு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-24.
  3. "வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானர்".தினகரன் (அக்டோபர் 23, 2021)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._கோவிந்தன்&oldid=3944164" இலிருந்து மீள்விக்கப்பட்டது