வேக்னரைட்டு

பாசுப்பேட்டு கனிமம்

வேக்னரைட்டு (Wagnerite) என்பது (Mg,Fe2+)2PO4F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகை கனிமமாகும். வேக்னரைட்டு கனிமம் இரும்பு, மக்னீசியம் தனிமங்களின் பாசுப்பேட்டும் புளோரைடும் கலந்த ஒரு கலப்பு கனிமமாகும்.[1][2] தீப்பாறைகளில் பிற பாசுப்பேட்டு கனிமங்களுடன் சேர்ந்து இது கிடைக்கிறது.[3] செருமனி நாட்டின் மூனிச்சு நகரத்தைச் சேர்ந்த கனிமவியலாளரான பிரான்சுமைக்கேல் வோன் வேக்னரை நினைவுகூரும் வகையில் கனிமத்திற்கு வேக்னரைட்டு எனப் பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் வேக்னரைட்டு கனிமத்தை Wag[4]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

வேக்னரைட்டு
Wagnerite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Mg,Fe2+)2PO4F
இனங்காணல்
நிறம்மஞ்சள், சாம்பல், சிவப்பு, செம்பழுப்பு, பழுப்பு, பச்சை
படிக இயல்புநீளமான பட்டை பட்டகங்கள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்பு{100} சமமற்ற பிளவு, {120} சமமற்ற பிளவு
முறிவுதுணை கூம்பு
விகுவுத் தன்மைஉடையும்
மோவின் அளவுகோல் வலிமை5-5.5
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு , பிசின் போன்றது
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும், கிட்டத்தட்ட ஒளி புகாப் பொருள்
ஒப்படர்த்தி3.15
அடர்த்தி3.15 (அளக்கப்பட்டது), 3.15 (கணக்கீடு)
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+), நிறமற்றது
பலதிசை வண்ணப்படிகமைஇல்லை
2V கோணம்25°-35° (அளக்கப்பட்டது)
கரைதிறன்அமிலங்களில் கரையும்
மேற்கோள்கள்[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mindat - Wagnerite
  2. 2.0 2.1 Webmineral - Wagnerite
  3. 3.0 3.1 Handbook of Mineralogy - Wagnerite
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேக்னரைட்டு&oldid=4112171" இலிருந்து மீள்விக்கப்பட்டது