வேட்டை நடனம்
வேட்டை நடனம் அல்லது பேடர வேஷா (Bedara Vesha); என்பது கர்நாடகாவின் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்களின் பொழுது சிர்சி நகரில் ஹோலி இரவுக்கு சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நிகழ்த்தப்படும் ஒரு நாட்டுப்புற நடனமாகும். இது 'வேட்டை நடனம்' என்றும் அழைக்கப்படுகிறது. சிர்சி மக்கள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்த தனித்துவமான நாட்டுப்புற நடனத்துடன் ஹோலியை கொண்டாடுகிறார்கள். [1] இது ஹோலி கொண்டாட்டத்தின் ஐந்து நாட்களிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒரு பெரிய கூட்டத்தை ஈர்க்கிறது. [2]
வரலாறு
தொகுபேடர வேஷா 300 ஆண்டுகால புராணக்கதைகளைக் கொண்ட ஒரு தனித்துவமான நாட்டுப்புற நடனம் ஆகும்.[3] புராணத்தின் படி, விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்குப் பின்னர், அப்பொழுது கல்யாணப்பட்டனம் என்றழைக்கப்பட்ட தற்போதைய சிர்சி மற்றும் பிற தென்னிந்திய பகுதிகள் சோண்டா வம்சத்தால் கைப்பற்றப்பட்டு ஆட்சி செய்யப்பட்டன.
சோண்டா பிராந்தியத்தில், முஸ்லிம் படையெடுப்பாளர்கள் தாக்குவார்கள் என்ற பயம் எப்போதும் இருந்தது. அவர்களைப் பாதுகாப்பதற்காக, ஆட்சியாளர்கள் பேடா சமூகத்தைச் சேர்ந்த இளைஞனும் விஜயநகர் பேரரசில் போர்வீரராக இருந்தவனுமான 'மல்லேசி' என்பவனை நியமித்தனர்.
ஆரம்பத்தில், மல்லேஷி தனது கடமைகளை சிறப்பாகச் செய்தார், ஆனால் பின்னர், அவர் ஒரு பிரச்சனையாளனாகவும், ஒரு பெண்களிடத்தில் பெருவிருப்பமுள்ளவனாகவும் ஆனான்.[1] மல்லேசி உள்ளூர் தலைவர் தாசப்பா செட்டியின் மகள் ருத்ராம்பிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அவள் தைரியமாகவும் அச்சமற்றவளாகவும் இருந்தாள்; சமூகத்தின் நலனுக்காக, தன் சமூகப் பெண்களை மல்லேசியிடமிருந்து காக்க அவர் மல்லேசியை மணந்தார். [4]
ஒரு ஹோலி இரவு, மல்லேசி நடனமாடிக் கொண்டிருந்தபோது, ருத்ராம்பிகா மல்லேசியின் கண்களில் திராவகத்தை வீசினார், அது அவனைக் குருடனாக்கியது. பின்னர் மல்லேசி ருத்ராம்பிகாவைக் கொல்ல துரத்த்திச் சென்றார், ஆனால் 12 கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார். அதன்பிறகு, கிராமவாசிகள் 'சதி' எனப்படும் ஒரு சடங்கினை பின்பற்றுபவர்களாதலால் ருத்ராம்பிகையாகிய அவனது மனைவியும் தனது கணவரின் இறுதி சடங்கில் தீ வைத்துக்கொண்டார். .
தன் சமூகப் பெண்களைக் காக்க ருத்ராம்பிகை செய்த தியாகத்தின் அடையாளமாகவே அதனைப் பாராட்டும்படியாக பேடர வேஷா என்ற இந்த விழா கொண்டாடப்பட்டு இந்நாள் வரை தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது
நிகழ்த்தும் முறை
தொகுவேட்டை நடனம் உண்மையாக நிகழ்த்தப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு பயிற்சி செய்யப்படுகிறது. பேடர வேச நடனத்தின் முழுக் கருப்பொருளும் ஒரு தீவிரமான பழங்குடியினராக மையப்படுத்தப்பட்ட ஒரு நபரின் உச்ச உருவமாகும். மைய நபர் ஆடம்பரமான வண்ணம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பார். சிவப்பு நிறத்தில் நடித்த ஆடம்பரமான பழங்குடியின உடையை அந்த மைய நபர் அணிந்திருப்பார். அவரது முகம் ஒரு திகிலூட்டும் தோற்றத்தை அளிக்க வர்ணம் பூசப்பட்டு, ஒரு மாயையை கொடுக்க அவரது மூக்கில் ஒரு பருத்திப் பந்து வைக்கப்படுகிறது.பருத்தி பந்தை மூக்கில் அணிவதன் காராணமாக் ஒரு பயங்கரமான ஊயிரினம் போன்ற தோற்றமளிப்பார். மேலும் ஏறக்குறைய 500 மயில் இறகுகளிலிருந்து செய்யபட்ட ஒரு பெரிய பீலியை அவர் முதுகில் அணிவார்.,[5] இது ஒரு வசீகரிக்கும் கலாச்சார அம்சமாகும். மயிலிறகுகள் அவரது அசைவுகளுக்கு ஏற்ப, அவரது உடல் தோற்றத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன. அவரது வலக்கையில் சிவப்பு நிறம் பூசப்பட்ட ஒரு வாளும் இடக்கையில் ஒரு கவசமும் இருக்கும். சிவப்பு நிறம் வேட்டை முடிந்து திரும்பி வந்ததைக் குறிக்கும்.[6] கலைஞர்களுக்கு மயில் இறகுகள், மீசை, பருத்தி மற்றும் சிவப்பு துணி, பழங்கள், கவசம் மற்றும் வாள் ஆகியவை கொண்டு பல நாட்களாக ஊரைச் சுற்றிப் பயிற்சி எடுக்கின்றனர்.
பழங்குடி நடனம் ஆடும் நபருக்கு சுமார் 15 ஆண்கள் ஆதரவு தருகிறார்கள். ஹோலிக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் பயிற்சி செய்யத் தொடங்குகிறார்கள். அவர்களில் ஆறு பேர் தம்தே எனப்படும் இசைக்கருவி வாசிக்கும் இசைக்கலைஞர்கள். மற்ற ஆறு பேர் ஹிலால் எனப்படும் ஜோதியை ஏந்திய ஊர்வலத்தை உருவாக்குகிறார்கள், பேடர வேசம் நிகழ்த்த அந்த நடிகருக்கு அதிக இடம் தேவைப்படுவதால் கூட்டம் தூரத்தே தள்ளியே நிற்கிறது. இரவு 9 மணிக்குத் தொடங்கி காலை 9 மணி வரை ஐந்து நாட்களும் நிகழ்த்தப்படும் இந்நிகழ்வுக்காக நகரம் முழுவதும் உற்சகமாக தாயாராகிவிடும்
நிகழ்விடங்கள்
தொகுபேடர வேசம் கார்நாடகாவின் நகரமான சிர்சி நகரில் நடத்தப்படுகிறது. பேடர வேசம் எனப்படும் வேட்டை நடனத்தின் போது ' டோலு குனிதா ' என்ற மற்றொரு நாட்டுப்புற நடனமும் நிகழ்த்தப்படுகிறது.
நவீன வடிவம்
தொகுகிட்டத்தட்ட 50 தனி கலைஞர்கள் 'விசில் ஊதுகுழல் மற்றும் தாளக் கருவிக் குழுவுடன் வேட்டைக்காரர் நடனத்தை நிகழ்த்துகிறார்கள்.பெடர வேசம்ம் பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்ட மரபுகளில் ஒன்றாகும், ஒரு பழங்குடி வேட்டைக்காரர் வேட்டையாட புறப்படுகிறார். ஆனால் ஏமாற்றத்துடன்,வெறுங்கையுடன் அவர் வீட்டிற்குத் திரும்பியபோது, ஒரு வயதான பெண்மணி அவருக்கு முன் தோன்றி, வேட்டையாடி அவரின் இயலாமையைக் கேலி செய்தார்.தந்திரங்களைத் தாங்காமல், வேட்டைக்காரன் வயதான பெண்ணைத் துரத்திச் சென்று தொண்டையை அறுக்கிறான், மேலும் அவனது வெல்லமுடியாத தன்மையையும் வீரத்தையும் கூறி காட்டைச் சுற்றி நடனமாடினான். பழங்குடியினரின் கோபமடைந்த ஆற்றலின் பிரதிநிதித்துவமாக, பேடர வேசப் பாரம்பரியம் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்றும் கூட, ஒரு வயதான பெண்மணியாக உடையணிந்த ஒரு சிறுவன் முதலில் கேலி செய்வதை போல வேட்டையாடுகிறான், அவனைத் துரத்த தூண்டுகிறான். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, அவரது செயல்களால் கலைஞர் கோபப்படுகிறார். அவரது ஆவேசமான, வசீகரிக்கும் நடிப்பாலும் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர். இந்த பாரம்பரியத்திற்கு மத முக்கியத்துவம் இல்லை; இருப்பினும், கலைஞர்கள் ஒரு சில சடங்குகளை செய்கிறார்கள். இந்த நிகழ்த்துக்கலை உத்தர கன்னடத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.[7]
குறிப்புகள்
தொகு- ↑ The Celebration of Holi
- ↑ "A unique folk dance". thehindu.com. 18 November 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
- ↑ A unique folk dance - The Hindu
- ↑ "Sirasiyalli disguised as offensive expression, Holi special". kannada.oneindia.com. 5 March 2015. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
- ↑ https://kannada.oneindia.com/festivals/general/2013/holi-festival-sirsi-bedara-vesha-folk-dance-072609.html
- ↑ https://www.deccanherald.com/a-fierce-expression-of-beauty-723540.html
- ↑ https://www.deccanherald.com/a-fierce-expression-of-beauty-723540.html