வேணா (இந்து அரசன்)

இந்து மன்னன்

வேணா (Vena) இந்து வேதங்களில் ஒரு அரசனாகக் கருதப்பட்டாலும், ஒரு தீயவனாகவும் ஊழல்வாதியாகவும் இருந்தான். இதனால் கோபம் கொண்ட பூமிக் கடவுளான பூமாதேவி, இனி மனிதர்களுக்குப் பயிர்களை வழங்கமாட்டேன் என்று முடிவெடுத்து பசுவாக உருவெடுத்து மறைந்ததனால் உலகம் இருளாக மாறியது. இதற்கிடையில், ரிஷிகள் குழு கோபத்தால் வேணாவைக் கொன்றது. பின்னர் அவர்கள் அவனது சடலத்தின் தொடையைத் தடவி, அவனது உடலில் இருந்து அனைத்து தீமைகளையும் வெளியேற்றினர். பின்னர், அவர்கள் வேணாவின் கையைத் தடவும்போது, பிருத்து என்பவர் வெளிப்பட்டார். இந்து மதத்தின்படி, இவர் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். வேணாவின் செயல்களால் கோபம் கொண்ட பூமாதேவி மக்களுக்கு பயிர் கொடுக்க மறுத்து பசு வடிவத்தில் மறைந்த காரணத்தால் வேணாவின் மகனான பிருத்து அவளை மீண்டும் அழைக்க முயன்று தவம் செய்ய காடுகளுக்குச் சென்றார். நீண்டநாள் தவத்தினால் பூமாதேவி வெளிபடாததால் தனது உயிரைவிட தயாராகிக்கொண்டிருந்தபோது, பசுவின் உருவில் பூமாதேவி, வெளிபட்டு அனைத்து மருத்துவ மற்றும் பயிர் தாவரங்களையும் தன்னிடம் செழித்து வளர்ந்த உயிரினங்களுக்கு திருப்பி அளித்தாள். பிருது மன்னன் பூமிதேவியை மீண்டும் அவளது இயல்பான நிலைக்கு கொண்டு வந்தார். அதனால் பூமிதேவியை பிருத்வி என்றும் அழைப்பர். [2]

வேணா
Information
குடும்பம்அங்கன் (தந்தை) , சுனிதா (தாயர்)
பிள்ளைகள்பிருத்து, நிசிதன் (வேணாவின் உடலைத் தடவியதால் தோன்றியவன்)[1]

இந்துக்களின் புனித இலக்கியங்களில், பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையிலான சந்நிதியர்களுக்கும் இடையிலான மோதல்கள் பற்றிய பல நிகழ்வுகள் உள்ளன. [3]

சான்றுகள் தொகு

  1. Motilal Bansaridas Publisher's Bhagavata Purana Book 2, Skandha IV Chapter 13
  2. www.wisdomlib.org. "The Kings Vena and Prithu". Wisdom Library. பார்க்கப்பட்ட நாள் 2016-04-21.
  3. Brahmins Versus Kshatriyas By Dr Ambedkar. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணா_(இந்து_அரசன்)&oldid=3722108" இலிருந்து மீள்விக்கப்பட்டது