வேணுகோபால சுவாமி கோயில்
அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் இக்கோயில் முழுவதும் கருங்கற்களால் மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்து இருக்கிறது. இக்கோபுரங்கள் ஓய்சாள சிற்ப முறைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைசூருக்கு அருகில் கிருட்டிணராச சாகர் அணையின் நீர் சூழ்ந்த இடத்தில் அமைந்திருந்த இக் கோயில் தற்போது கொஞ்சம் மேற்காக மண் மேடான இடத்தில் நீருக்கடியில் இருந்த கோயிலை பெயர்த்து எடுத்து கற்த் தூண்களையும், இதர கோயிலின் பகுதிகளைப் புதுப்பித்து கட்டப் படுகிறது.[1][2][3]
அமைவிடம்
தொகுஇந்தியாவின், கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், கிருட்டிணராச சாகர் அணையின் உள் பகுதியில் அமைந்துள்ள கண்ணம்பாடி ஊரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மைசூரிலிருந்து கர்நாடக அரசுப் பேருந்துகளை கிருட்டிணராச சாகர் அணை வரை இயக்குகிறது. தொடர்ந்து மூவுருளியில் சுமார் ஐந்து கி.மீ தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
வெளி இணைப்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Venugopalaswamy Temple".
- ↑ "Relocation of Krishnarajasagar Venugopalaswamy Temple". MysoreSamachar.com.
- ↑ "Submerged temple's reincarnation almost complete". One India News.