வேதநாராயண கோயில், நாகலாபுரம்
ஸ்ரீ வேதநாராயண கோயில் (Sri Vedanarayana Temple) அல்லது மத்ஸ்ய நாராயண கோயில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் நாகலபுரம் நகரில் அமைந்துள்ள இந்து-வைணவ கோயில் ஆகும். இந்த கோயில் விஷ்ணுவிற்கு மச்ச (மீன்) அவதாரம் வடிவத்தில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் இது மத்ஸ்ய நாராயணா அல்லது வேத நாராயணா என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் திருமால் தசாவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாகச் சித்தரிக்கப்படும் ஒரு சில கோயில்களில் ஒன்றாகும்.[1]
வேதநாராயண கோயில், நாகலாபுரம் | |
---|---|
இராஜ கோபுரம், வேதநாராயண கோயில், நாகலாபுரம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம்: | சித்தூர் மாவட்டம் |
அமைவு: | நாகலாபுரம் |
ஆள்கூறுகள்: | 13°23′15.7″N 79°47′48.7″E / 13.387694°N 79.796861°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | சமஸ்கிருதம், திராவிட மொழிகள் |
வரலாறு | |
கோயில் அறக்கட்டளை: | திருமலா திருப்பதி தேவஸ்தானம் |
இணையதளம்: | www |
நிர்வாகம்
தொகுஇந்த கோயிலைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்துவருகின்றது.[1]
முக்கியத்துவம்
தொகுஇந்த கோயில் சூரிய பூசை உற்சவத்திற்கு புகழ் பெற்றது. இது ஒரு வானியல் அற்புதமாகக் கருதப்படுகிறது.[2] இப்பண்டிகையின் போது ஒளிரும் சூரிய கதிர்கள் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் கர்பக்கிரகத்தில் உள்ள குலதெய்வமான வேதநாராயண மீது நேரடியாக விழுகின்றது.[1] காலை கோயில் கோபுரத்தில் தொடங்கி மாலை கற்பா கிரகத்தின் மீது 360 அடி தூரம் பயணிக்கிறது. முதல் நாளில் கதிர்கள் தெய்வத்தின் அடிவாரத்திலும், இரண்டாவது நாள் நாவலிலும், மூன்றாம் நாள் கிரீடத்திலும் விழுகிறது.
பண்டிகைகள்
தொகுசூரிய பூஜை உற்சவம் கோயிலின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகையின் போது சூரியனின் கதிர்கள் நேரடியாகச் சூரிய அஸ்தமனத்திற்கு முன் மாலை நேரத்தில் மேற்கு நோக்கி எதிர்கொள்ளும் கர்பக்ரிஹாவில் உள்ள தெய்வத்தின் மீது விழுகின்றன.[1]
மேலும் காண்க
தொகு- திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் (டி.டி.டி) கீழ் உள்ள கோயில்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Sun rays enter temple a day before Surya Puja festival". The Hindu. 25 March 2015. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/sun-rays-enter-temple-a-day-before-surya-puja-festival/article7030615.ece. பார்த்த நாள்: 26 September 2017.
- ↑ "Nagalapuram temple all set for ‘Surya Puja’". The Hindu. 19 May 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/nagalapuram-temple-all-set-for-surya-puja/article5759657.ece. பார்த்த நாள்: 24 July 2017.