வேதரத்தினம் அப்பாகுட்டி
வேதரத்தினம் அப்பாகுட்டிப் பிள்ளை (Vedaratnam Appakutti Pillai) என்பவர் ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரர், சமூக சேவகர் மற்றும் கத்தூரிபா காந்தி அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார். கத்தூரிபா காந்தி அறக்கட்டளை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் பெண்களின் நலனுக்காகப் பணியாற்றும் இலாப நோக்கமற்ற ஒரு அரச சார்பற்ற அமைப்பு ஆகும்.[1] சுதந்திரக் கொள்கையில் நாட்டமுடை செயல்வீரரான வேதரத்தினம் என்ற உப்பு வியாபாரியின் மகனாக தமிழ்நாட்டில் இவர் பிறந்தார். தன்னுடைய தந்தையின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வேதாரண்யத்தில் வறுமையால் வாடும் ஏழைப் பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகக் கத்தூரிபா காந்தி கன்னிகா குருகுலம் என்ற கிராமப்புற உண்டு உறைவிடப் பள்ளியைத் தொடங்கினார்.[2][3] அச்சுப்பள்ளி, மின்னணு மற்றும் கணிப்பொறிப் பயிற்சிப்பள்ளி சாம்பிராணி போன்ற நறுமணப் பொருகள் தயாரிக்கும் தொழிற்சாலை எனப் படிப்படியாக இந்நிறுவனம் வளர்ச்சியடைந்தது.[4] 1989 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நாட்டின் நான்காவது பெரிய விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது.[5]
வேதரத்தினம் அப்பாகுட்டி Vedaratnam Appakutti | |
---|---|
பிறப்பு | வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | வேதரத்தினம் அப்பாகுட்டிப் பிள்ளை |
பணி | சமூக சேவகர் |
பெற்றோர் | அ. வேதரத்தினம் பிள்ளை |
விருதுகள் | பத்மசிறீ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Services of freedom fighter Sardar Vedaratnam recalled". The Hindu. 27 February 2008. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
- ↑ "Kavignar Ramalingam Pillai's statue unveiled by Elangovan". The Hindu. 16 February 2009. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
- ↑ "Indian Freedom Fighter". SB FSU. 2006. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
- ↑ "Satsang introduction". Oocities. 2015. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)