வேதாசு வெங்கையா
வேதாசு வெங்கையா (Vedas Venkaiah) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1941 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இரண்டாம் தேதியன்று சூரியப்பேட்டையின் குடகுதாவில் இவர் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் இராமையா வெங்கையா என்பதாகும். 1967-70 ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து பட்டம் பெற்றார். வணிகவரி உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆன்டு வரை ஆந்திரப் பிரதேசத்தின் சூரியப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1][2][3]
வேதாசு வெங்கையா Vedas Venkaiah | |
---|---|
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் | |
தொகுதி | சூர்யபேட்டை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 மார்ச்சு 1941 தெலங்காணா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | குடகுதா, சூரியபேட்டை |
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசு கட்சி சார்பில் சூரியப் பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் ரசினி குமாரியை விட 11,518 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "State Elections 2004" Election Commission of India
"Profile of Vedas Venkaiah - Suryapet" hello ap.2013-01-29. - ↑ "Election Commission of India"
- ↑ "List of MLAs 2004" aplegislature.org