வேதாரம்பம்

வேதாரம்பம் (Vedarambha) (சமக்கிருதம்: वेदारम्भ), உபநயனம் முடித்த சிறுவன் குரு குலத்தில் குருவிடம் வேதக் கல்வி மற்றும் போர்க் கலை பயிலச் செல்லும் போது செய்ய வேண்டிய சடங்கு ஆகும். இது இந்து சமயத்தினரின் 16 சடங்குகளில் பத்தாவது ஆகும். [1]இருப்பினும் இது சில சமயங்களில் வேறுபட்ட நிலைப்பாடும் அளிக்கப்படுகிறது.[2]

விளக்கம்

தொகு

உபநயனம் எனப்படும் முப்புரி நூலை அணிந்த ஒரு ஆண்டு வரை வேதக் கல்வி மற்றும் போர்க் கலை போன்ற பிற கல்விகளை பயில பரிந்துரைக்கப்படுகிறது. இச்சடங்கின் போது முதலில் குரு அல்லது ஆசான் மாணவனுக்கு காயத்திரி மந்திரத்தை கற்பிப்பதுடன்; மாணவன் ஞானத்துடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று மந்திரம் உச்சரிக்கிறார்.[3][4] மேலும் மாணவனுக்கு சந்தியா வந்தனம் போன்ற அன்றாட அனுஷ்டானங்கள் செய்வது குறித்து கற்பிக்கிறார்.[5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bose, Manilal (1998). Social and Cultural History of Ancient India (in ஆங்கிலம்). Concept Publishing Company. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-598-0.
  2. Pandey, Rajbali (1969). Hindu Saṁskāras: Socio-religious Study of the Hindu Sacraments (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0396-1.
  3. Pandit, Bansi (2001). The Hindu Mind: Fundamentals of Hindu Religion and Philosophy for All Ages (in ஆங்கிலம்). New Age Books. p. 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7822-007-9.
  4. Mohapatra, Amulya; Mohapatra, Bijaya (1993-01-01). Hinduism: Analytical Study (in ஆங்கிலம்). Mittal Publications. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-388-9.
  5. Walker, Benjamin (2019-04-09). Hindu World: An Encyclopedic Survey of Hinduism. In Two Volumes. Volume I A-L (in ஆங்கிலம்). Routledge. p. 321. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-429-62465-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாரம்பம்&oldid=3858568" இலிருந்து மீள்விக்கப்பட்டது