வேதியியற் பொறி

வேதியியற் பொறி (chemical trap) என்பது வேதியியலில் ஒருசில மூலக்கூறுகளைக் கண்டறிய பயன்படுத்தப்படும் வேதிச் சேர்மத்தைக் குறிக்கிறது. இக்கண்டறிதல் நிகழும் சூழல்கள் சில இங்கே தரப்பட்டுள்ளது[1].

• மூலக்கூறின் செறிவு மிகவும் குறைவாக மற்றும் கண்டறிதல் வரம்பிற்கு கீழேயும் உள்ள நிலை.

• மூலக்கூறின் வினைத்திறன் அதிகமாக உள்ள நிலை மற்றும் அதை தனிமைப்படுத்த இயலாத நிலை அல்லது நிறமாலைக் காட்டியால் கண்டறியமுடியாத நிலை. (உதாரணமாக வளையபியூட்டாடையீன்)

• மூலக்கூறானது, சுழிமாய்க் கலவையில் எதிர் வேற்றுருவாக உள்ள நிலை.

வேதியியல் பொறியுடன் ஈடுபடும் வினையின் விளைவாக உருவாகும் விளைபொருளில் இருந்து கண்டறியப்பட வேண்டிய மூலக்கூறின்,

• இருப்பை உறுதிப்படுத்த இயலும்

• அளவை அறுதியிட முடியும்

மேற்கோள்கள் தொகு

  1. March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, ISBN 0-471-85472-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதியியற்_பொறி&oldid=2747033" இலிருந்து மீள்விக்கப்பட்டது