வேதியியல் படிமலர்ச்சி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வேதியியல் படிமலர்ச்சி புவிகோளம் சூரியனிடமிருந்து உடைந்து நகர்ந்த துண்டு ஆகும். இது வளிம நிலையிலிருந்து பின்னர் நீர்ம நிலைக்கு மாறிப் பின் திண்மப் பொருளாக மாறியது. அதிகப்படியான புற ஊதாக் கதிர்கள், அண்டக் கதிர்கள், மின்னல் மூலமாக மிகச்சிறிய மூலக்கூறுகள் அனைத்தும் ஒன்றிணைந்து மிகப் பெரிய மூலக்கூறுகளாகவும் எளிய கரிம கூட்டுப் பொருட்களாகவும் மாறின. வளிமண்டலம் குளிர்ந்து புவிக்கோளமும் குளிர்ச்சியடைந்த்தால் நீர்ப்பகுதியான கடல் தோன்றியது. இதனைத் தொடர்ந்து கரிம வேதியியல் பொருட்களும் உயிர்களும் தோன்றியிருக்க வாய்ப்பு உள்ளது. உயிர் தோற்றத்தை விளக்கும் கொள்கையை வேதியியல் பல்வேறு வேதிப்படிகளில் விளக்கலாம்.
முதல் நிலை
தொகுஹைட்ரஜனும் நைட்ரஜனும் இணைந்து அமோனியா உருவாகியிருக்கும். ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் இணைந்து நீர் உருவாகியிருக்கலாம்.
இரண்டாம் நிலை
தொகுசூரியன், மின்னல் ஆகிய ஆற்றலினால் உயிர்களை உருவாக்கும் அடிப்படைப் பொருட்களான அமினோ அமிலம், கொழுப்பு அமிலம், புரதம், ஒற்றை சர்க்கரை, பியுரைன், வைட்டமின் போன்றவைகள் தோன்றியிருக்கலாம்.
மூன்றாம் நிலை
தொகுசிறு சிறு மூலக்கூறுகள் இணைந்து நியூக்ளிக் அமிலம், புரதம் ஆகிய பெருமூலக்கூறுகள் உருவாகி உட்கருப் புரதங்களை தோற்றுவித்திருக்கலாம்.
நான்காம் நிலை
தொகுகோ-அசர்வேட்டு ஆக்க முறையில் பெருமூலக்கூறுகள் இணைந்து கூழ்ம அமைப்பு உருவாகி நீருடன் கலக்காமல் இருந்திருக்கலாமென்று ஒப்பாரின் என்ற அறிவியலாளர் கருதுகிறார்.
ஐந்தாம் நிலை
தொகுஇருபடலங்களால் சூழப்பட்ட உருண்டை வடிவ முன்னோடி உயிரணு உருவாகியிருக்கலாம்.
ஆறாம் நிலை
தொகுமுன்னோடி உயிரணுக்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களை உற்பத்திச் செய்து தன் இரட்டிப்புத்திறனைப் பெற்றதால் பாக்டீரியா, வைரஸ் போன்ற அமைப்புக்கள் உருவாகியிருக்கலாம் என்று ஒப்பாரின், ஹோல்குடன் மற்றும் யூரே மில்லர் ஆகியோர் கருதினர்.