வேதியியல் வரைபடக் கோட்பாடு
வேதியியல் வரைபடக் கோட்பாடு (Chemical graph theory) என்பது கணித வேதியியலின் இடவியல் பிரிவு ஆகும், வேதியியல் நிகழ்வுகளின் கணித மாதிரியாக்கத்திற்கு வரைபடக் கோட்பாடு பயன்படுத்துகிறது. [1] அலெக்சாண்ட்ரு பாலாபன், ஆன்டே குரோவாக்கு, இவான் குட்மேன், அருவோ ஒசோயா, மிலன் ராண்டிக் மற்றும் நெனாட் டிரினாச்சுடிக்கு ஆகியோர் வேதியியல் வரைபடக் கோட்பாட்டின் முன்னோடிகளாவர். ஆரி வீனர் மற்றும் பலரும் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதுண்டு. 1988 ஆம் ஆண்டில், பல நூறு ஆராய்ச்சியாளர்கள் இந்த பகுதியில் பணியாற்றினர், ஆண்டுதோறும் சுமார் 500 கட்டுரைகளை உருவாக்கினர். 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி வரையிலான துறை வரலாற்றை சுருக்கமாகக் கூறிய டிரினாச்சுடிக்கு, வேதியியல் வரைபடக் கோட்பாடு நூலாக இரண்டு-தொகுதி விரிவான உரை உட்பட பல தனிவரைவு நூல்கள் இப்பகுதியில் எழுதப்பட்டுள்ளன. [2]
ஒரு வேதியியல் வரைபடத்தின் பண்புகள் அதாவது, ஒரு மூலக்கூறின் வரைபடம்-கோட்பாட்டு பிரதிநிதித்துவம் போன்ற வேதியியல் நிகழ்வுகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை இவை அளிக்கின்றன என்று கோட்பாட்டின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். வேதியியல் ஆராய்ச்சியில் வரைபடங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் மற்றவர்கள் வாதிடுகின்றனர். பொருட்களை எல்லையற்ற யூக்ளிடியன் வரைபடங்களாக, குறிப்பாக கால வரைபட படிகங்களால் .குறிப்பிடுவது இக்கோட்பாட்டின் ஒரு மாறுபாடாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Danail Bonchev, D.H. Rouvray (eds.) (1991) "Chemical Graph Theory: Introduction and Fundamentals", பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85626-454-7
- ↑ A review of the book by Ivan Gutman, Oskar E. Polansky, "Mathematical Concepts in Organic Chemistry" in SIAM Review Vol. 30, No. 2 (1988), pp. 348-350