வேத சந்தஸ்கள்

வேத சந்தஸ்கள் (Vedic meter) இந்து சமய வேத மந்திரங்களில் எத்தனை அடிகள் (பதங்கள்), எத்தனை எழுத்துக்கள் (அட்சரங்கள்) இருக்க வேண்டும் என நிர்ணயிக்கின்ற பகுதியே சந்தஸ் எனப்படும். சமஸ்கிருத மொழியில் பல சந்தங்களைப் பற்றி சந்தஸ் தொடர்பான சாத்திரங்கள் கூறியிருந்தாலும், வழக்கில் ஏழு சந்தங்களே (சந்தஸ்கள்) உள்ளன. அவைகள்:[1] [2]

  1. காயத்திரி சந்தம்: மூன்று அடிகள், ஒரு அடிக்கு எட்டு எழுத்துக்களுடன் மொத்தம் 24 எழுத்துக்களுடன் கூடிய மந்திரங்கள் கொண்டது.
  2. ஊஷ்ணிக் சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு ஏழு எழுத்துக்கள்; மொத்தம் 28 எழுத்துக்களுடன் கூடியது.
  3. அனுஷ்டுப் சந்தம்: நான்கு அடிகள், ஒர் அடிக்கு எட்டு எழுத்துக்கள்; மொத்தம் 32 எழுத்துக்களுடன் கூடியது.
  4. ப்ருஹதி சந்தம்: நான்கு அடிகள், ஒவ்வொரு அடிக்கு முறையே 8, ,, 12, 8 எழுத்துக்களுடன் மொத்தம் 36 எழுத்துக்கள் கொண்டது.
  5. பங்கதி சந்தம்: நான்கு அல்லது ஐந்து அடிகள்; மொத்தம் 40 எழுத்துக்களுடன் கூடியது.
  6. திருஷ்டுப் சந்தம்: நான்கு அடிகளுடன், ஓர் அடிக்கு 11 எழுத்துக்களுடன், மொத்தம் 44 எழுத்துக்களுடன் கூடியது.
  7. ஜகதி சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு 12 எழுத்துக்கள்; மொத்தம் 48 எழுத்துக்களுடன் கூடியது.

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் அனுஷ்டுப் சந்தஸ் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-20.
  2. https://archive.org/details/vedicmetreinitsh00arnouoft
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேத_சந்தஸ்கள்&oldid=3572562" இலிருந்து மீள்விக்கப்பட்டது