வேந்தன் (கடவுள்)
வேந்தன் என்பவன் சங்ககாலத் தமிழர்கள் வகுத்த ஐந்திணைகளில் மருத நிலத்தின் கடவுளாவான்.[1] பிற்காலத்தில் வேந்தன் என்ற பெயரை இந்திரன் என்று அழைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[2] இந்திர விழா இந்த மருத நில வேந்தனான இந்திரனுக்குக் கொண்டாடப்படுவது.
இந்திரவிழா
தொகுஇந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார்.[3]
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ வேந்தன் மேய தீம்புணல் உலகமும் - தொல்காப்பியம்
- ↑ http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=249&pno=46
- ↑ http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041333.htm இந்திர விழா