வேனில் விழா

வேனில் விழா என்பது சேரனின் வஞ்சி நகரை அடுத்த காஞ்சியம் பெருந்துறையில் நடந்த விழாவாகும்.

கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் தன் பேரியாறு (=பெரியாறு) பாயும் பொழிலில் வேனில் விழா கொண்டாடினான். தன் அரசுச் சுற்றத்தோடு உண்டு நுகர்ந்து மகிழ்வுடன் கொண்டாடினான். அப்போது அவன் ஆயத்தார் (உறவுத்தோழர்) ஆற்றுநீரில் ஆடி மகிழ்ந்தனர். (பதிற்றுப்பத்து 48)

சோழனின் புகார் நகரில் நடந்த வேனில் விழா பற்றிச் சிலப்பதிகாரத்தில் தரப்பட்டுள்ளது.

பாண்டியனின் மதுரை நகரில் நடந்த வேனில்விழா பற்றிப் பரிபாடல் வைகை பற்றிய பாடல்களில் காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேனில்_விழா&oldid=4123498" இலிருந்து மீள்விக்கப்பட்டது