வேர் அழுத்தம்
வேர் அழுத்தம் (Root pressure) என்பது ஒரு வேர் அமைப்பின் செல்களிலுள்ள குறுக்கு சவ்வூடுபரவல் அழுத்தம் ஆகும. இதன் விளைவாக தாவரயினப் பாலானது தாவரங்களின் இலைகளுக்குத் தண்டு வழியாக உயர்ந்து செல்லும் [1].
மண்ணின் ஈரப்பத அளவு அதிகமாக இருக்கும் இரவு நேரத்திலோ அல்லது நீராவிப்போக்கு குறைவாக இருக்கும் பகல் நேரத்திலோ சில சத்துநீரோட்டத் தாவரங்களில் சைலம் பகுதியில் வேர் அழுத்தம் தோன்றுகிறது. நீராவிப்போக்கு அதிகமாக இருக்கும்போது சைலச் சாறு பொதுவாக அழுத்தத்திற்கு உட்படுவதற்கு மாறாக ஆவியுயிர்ப்பீர்ப்பில் காணப்படுகிறது. வேர் அழுத்தம் காரணமாக சில தாவரங்களில் , இலைகளின் முனைகளிலோ அல்லது விளிம்புகளிலிருந்தோ துளித்துளியாக சைலச்சாறு கசிகிறது அல்லது உமிழப்படுகிறது. மண்ணுக்கு அருகேயுள்ள தாவரத்தின் அடி இளந்தண்டை நீக்குவதன் மூலம் வேர் அழுத்தம் ஆய்வு செய்யப்படுகிறது. வேர் அழுத்தம் காரணமாக வெட்டப்பட்ட தண்டின் சைலம் திசுவிலிருந்து சாறு பல மணி நேரத்திற்கு அல்லது நாட்களுக்குக் கசிகிறது. அழுத்தத்தை அளக்கும் ஒரு மானோமீட்டர் வெட்டப்பட்ட இத்தண்டுடன் இணைக்கப்பட்டால் வேர் அழுத்தத்தை நம்மால் அளவிட முடியும்.
கனிம ஊட்டச்சத்து அயனிகளை வேர்களின் சைலம் திசுவில் கடத்துவதன் மூலம் வேர் அழுத்தம் ஏற்படுகிறது. நீராவிப் போக்கு நடைபெறாமல் அயனிகள் தண்டுகளுக்கு கடத்தப்படுவதால் அவை வேர்த்தொகுப்பில் திரண்டு நீர்த்திறனைக் குறைக்கின்றன. பின்னர் சவ்வூடு பரவல் காரணமாக மண்ணிலிருந்து தண்ணீர் வேர் தொகுப்புக்குள் பரவுகிறது. சைலத்தில் திரளும் தண்ணீர் வலிமையான செல்கள் மீது அழுத்தம் கொடுப்பதால் வேர் அழுத்தம் தோன்றுகிறது. வேர் அழுத்தம் கொடுக்கும் சக்தியினாலேயே தண்ணீர் வேரிலிந்து தண்டுகளுக்கு ஏறிவருகிறது, ஆனால் உயரமான மரங்களின் உச்சிக்கு தண்ணீர் ஊடுருவுவதற்கு இச்சக்தி போதுமானதாக இல்லை. சில தாவரங்களில் அளவிடப்படும் அதிகபட்ச வேர் அழுத்தம் அவற்றில் தண்ணீரை 6.87 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே உயர்த்த முடிகிறது. ஆனால் உயரமான மரங்கள் 100 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ளன.
அகத்தோலின் பங்கு
தொகுவேர் அழுத்தத்தின் வளர்ச்சியில் வேரிலுள்ள எண்டோடெர்மிசு எனப்படும் அகத்தோலின் பங்கு முக்கியமானதாகும். எண்டோடெர்மிசு என்பது புறணி மற்றும் பெரிசைக்கிளிக்கு இடையில் அமைந்துள்ள மெல்லிய ஒற்றை உள்ளடுக்கு செல்களாகும். இந்த அகத்தோலில் பீப்பாய் வடிவ செல்கள் ஒரு வரிசையில் அமைந்துள்ளன. இச்செல்களின் ஆரச் சுவரிலும் உள் கிடைமட்ட சுவரிலும் கேசுபேரியன் தடிப்பு காணப்படுகிறது. வேரின் புறணிப்பகுதிவழியாக நீர் கடத்தப்படும்போது புறணி செல்களின் செல்சுவர் மற்றும் செல்லிடைவெளி வழியாக நீர் சென்று அகத்தோலின் செல்சுவரிலுள்ள இக்கேசுபேரியன் தடிப்பு பகுதிக்கு வருகிறது. அகத்தோல் மற்றும் பெரிசைக்கிள் வழியாக நீர் சென்று சைலத்தின் செல்கள் மூலம் சைலத்தை அடைகின்றது. கனிம ஊட்டச்சத்து அயனிகள் அகத்தோல் செல் சுவர்கள் மூலம் இயல்பாக நகருவதை கேசுபேரியன் தடுப்பு தடுக்கிறது. தண்ணீர் மற்றும் அயனிகள் அப்போபிளாசுட்டு பாதை வழியாக இந்த செல் சுவர்களில் நகரும். ஒருமுறை அகத்தோலுக்கு உள்ளே வந்த அயனிகள் மீண்டும் அகத்தோலில் உள்ள காசுபேரியன் தடிப்பு வழியாக திரும்பச் செல்ல முடியாததால் அவை சிம்பிளாசுட்டு பாதையில் நகர்கின்றன. அதாவது ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு உயிருள்ள பிளாசுமோடெசுமாட்டா மற்றும் சைட்டோபிளாசம் எனப்படும் அடுத்தடுத்து அமைந்த செல்கள் வழியாக தொடர்ந்து சைலத்திற்குள் கடத்தப்படுகின்றன. தாவரத்தின் மேற்பகுதிக்கு கடத்தப்படுகின்றன. செல் சவ்வுக்குப் பதிலாக காசுப்பேரியன் தடிப்பு திரளும் அயனிகள் அப்போபிளாசுட்டு பாதைவழியாக அகத்தோலுக்கு வெளியே செல்வதைத் தடுக்கிறது. சைலத்திற்குள் உள்ள அகத்தோலுக்குள் திரளும் அயனிகள் உருவாக்கும் நீர்த்திறன் மற்றும் சவ்வூடு பரவலினால் தண்ணீர் மண்ணில் இருந்து அகத்தோல் மற்றும் சைலம் வழியாக புறணிக்குள் பரவுகிறது.
முக்கியத்துவம்
தொகுநீராவிப்போக்கின் அளவு குறைவாக அல்லது சுழியாக இருக்கும் போது வேர் அழுத்தமே தண்ணீர் மற்றும் கரைந்துள்ள கனிம ஊட்டச்சத்துக்களை வேரிலிருந்து சைலம் வழியாக சிறிய தாவரங்களின் உச்சிக்கு கடத்துகிறது. இவ்வாறாகத் தோன்றும் அதிகபட்ச வேர் அழுத்தம் 0.6 மெகாபாசுக்கல் என அளவிடப்பட்டுள்ளது. ஆனால் சில தாவர இனங்களில் எந்தவிதமான வேர் அழுத்தமும் உருவாக்கப்படுவதில்லை. தண்ணீர் மற்றும் கனிம ஊட்டச்சத்துக்கள் பரவலாக வாசுகுலார் எனப்படும் சத்து நீரோட்டத் தாவரங்களில் இயங்குவதற்கான முக்கிய பங்களிப்பு ஆவியுயிர்ப்பீர்ப்பு எனக் கருதப்படுகிறது. இருப்பினும்100% ஈரப்பதத்தில் வளர்க்கப்படும் சூரியகாந்தி செடிகள் சாதாரணமாக வளர்கின்றன. மற்றும் வழக்கமான ஈரப்பதத்தில் உள்ள தாவரங்கள் போல அதே அளவு கனிம ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கின்றன. 100% ஈரப்பதத்தில் இருக்கும் தாவரங்களைக் காட்டிலும் இவற்றின் நீராவிப் போக்கு விகிதம் 10 முதல் 15 மடங்கு அதிகமாகும். எனவே குட்டைத் தாவரங்களில் கனிம ஊட்டச்சத்துகள் மேல் நோக்கி கடத்தப்படுவதற்கு நீராவிப் போக்கு ஒரு நிபந்தனையல்ல என்பதை உணர முடிகிறது [2].
குளிர்காலத்தில் சிலசமயங்களில் சைலம் வெசல்கள் காலியாக உள்ளன. இச்சைலம் வெசல்களைக் நிரப்புவதற்கு வேர் அழுத்தம் முக்கியமானதாக இருக்கிறது [3]. இருப்பினும் வேர் அழுத்தம் இல்லாமல் ஊட சில இனங்களின் வெசல்கள் நிரப்பப்படுகின்றன. சில இலையுதிர்கால மரங்களில் அவை இலைகளை உதிர்ப்பதற்கு முன்னர் பெரும்பாலும் வேர் அழுத்தம் அதிகமாக உள்ளது. இலைகள் இல்லாமல் நீராவிப் போக்கு குறைவாக உள்ளது, மேலும் கரிம கரைசல்கள் திரட்டப்பட்டு சைலத்தின் நீர் திறனை குறைக்கின்றன [4].
சர்க்கரைப் பனை போன்ற மர வகைகளின் சைலத்தில் வசந்த காலத்தின் ஆரம்பத்தில் அதிக அடர்த்தியுள்ள சர்க்கரை குவிக்கிறது, இதுவே பனை சர்க்கரையின் ஆதாரமாகும். சில மரங்கள் பின் குளிர்காலத்தில் அல்லது வசந்த காலத்தின் தொடக்கத்தில் அவற்றின் தண்டு கத்தரிக்கப்படும்போது சைலச்சாற்றை நிற்காமல் தொடர்ந்து வடிக்கின்றன. உதாரணம்: மேப்பிள், எல்ம். இத்தகைய பால் வடிதல் என்பது வேர் அழுத்தத்திற்கு இணையான செயலாகும். அயனிகளுக்குப் பதிலாக சர்க்கரைகள் மட்டும் சைலத்தின் நீர்த்திற்னைக் குறைக்கின்றன. மேப்பிள் மரங்களைப் பொறுத்த வரையில் பால் வடிதல் என்பது வேர் அழுத்தத்தினால் நிகழ்வது அல்ல, அது தண்டில் ஏற்படும் மாற்றங்களால் நிகழ்வது ஆகும் [1]..
அனைத்து புற்களும் வேர் அழுத்தத்தைத் தோற்றுவிக்கின்றன. மூங்கில்களில் தோன்றும் வேர் அழுத்தம் அவற்றின் அதிகபட்ச உயரத்துடன் தொடர்புடையது ஆகும் [5].
மேற்கோள்கள்
தொகு- ↑ F. Baluska; Milada Ciamporová; Otília Gasparíková; Peter W. Barlow, eds. (2013). Structure and Function of Roots: Proceedings of the Fourth International Symposium on Structure and Function of Roots, June 20–26, 1993. Vol. 58 (illustrated ed.). Springer Science & Business Media. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789401731010.
- ↑ Tanner, W.; Beevers, H. (31 July 2001). "Transpiration, a prerequisite for long-distance transport of minerals in plants?". Proceedings of the National Academy of Sciences 98 (16): 9443–9447. doi:10.1073/pnas.161279898. பப்மெட்:11481499.
- ↑ Sperry, J. S.; Holbrook, N. M.; Zimmermann, M. H.; Tyree, M. T. (February 1987). "Spring Filling of Xylem Vessels in Wild Grapevine". Plant Physiology 83 (2): 414–417. doi:10.1104/pp.83.2.414.
- ↑ Tibbetts, T. J.; Ewers, F. W. (September 2000). "Root pressure and specific conductivity in temperate lianas: exotic Celastrus orbiculatus (Celastraceae) vs. native Vitis riparia (Vitaceae).". American Journal of Botany 87 (9): 1272–1278. doi:10.2307/2656720. பப்மெட்:10991898.
- ↑ Cao, Kun-Fang; Yang, Shi-Jian; Zhang, Yong-Jiang; Brodribb, T.J. (July 2012). "Maximum height of grasses is determined by roots". Ecology Letters 15 (7): 666-672. doi:10.1111/j.1461-0248.2012.01783.x. பப்மெட்:22489611.
புற இணைப்புகள்
தொகு- Picture of a Pressure Gauge on a Tree பரணிடப்பட்டது 2010-07-05 at the வந்தவழி இயந்திரம், from a digital collection of maple research at the University of Vermont.