வேலி (நில அளவை)

(வேலி - நில அளவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேலி என்பது தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு அளவாகும்.

அளவை விளக்கம்

தொகு

தஞ்சை மாவட்டத்தில் இக்காலத்திலும் நிலத்தை 'வேலி' என்னும் அளவையால் குறிப்பிடுகின்றனர்.
1 குழி = 12 அடி *12 அடி = 144 சதுர அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

அண்மைக்காலத்தில் கருணா என்று பெயரிடப்பட்ட நெல் ஒருவேலி நிலத்தில் 700 மூட்டை வரை விளைந்துள்ளது. இது சங்ககாலத்தில் ஒரு வேலி நிலத்தில் 1000 மூட்டை நெல் என்று விளைந்தது மிகையன்று.[1]

கல்லாடனார் குறிப்பு

தொகு

பொறையாறு பாயும் நிலம் பொறையாற்று கிழான் என்னும் பெருங்குடி மகனுக்கு இறையிலியாக வழங்கப்பட்டிருந்தது. பொறையாற்று கிழான் சிறந்த வள்ளல். வேங்கட மலைக்கு அப்பால் கல்லாடம் என்னும் ஊரில் வாழ்ந்த கல்லாடனார் தன் ஊர்மக்கள் பசியால் வாடியபோது தன் குடும்பத்துடன் தஞ்சைப் பகுதியில் இருந்த இவன் அண்டை நாட்டுக்கு வந்து சேர்ந்தார். மொறையாற்று கிழான் இவரையும் இவரது குடும்பத்தாரையும் பேணிப் பாதுகாத்தான். புலவர் அவனைப் பாடும் போது 'வேலி ஆயிரம் விளைக நின் வயலை' என்று வாழ்த்தினார். - புறம் 391

முடத்தாமக் கண்ணியார் குறிப்பு

தொகு

சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் வாழ்த்தும்போது 'சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆகக் காவிரி புரக்கும் நாடு' கிழவோன் என்று குறிப்பிடுகிறார். -பொருநராற்றுப்படை 246-248

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. C. P. சரவணன் (25 சூலை 2017). பாகம்-16: நில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!. தினமணி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலி_(நில_அளவை)&oldid=3225650" இலிருந்து மீள்விக்கப்பட்டது