வேலைக்காரன் (தொலைக்காட்சித் தொடர்)

வேலைக்காரன் என்பது 2020-2022 விஜய் தொலைக்காட்சியில்[1] ஒளிபரப்பான குடும்பத் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[2][3] இந்த தொடரில் சபரி, கோமதி பிரியா மற்றும் சத்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் வாசு விக்ரம், சோனா நாயுடு, நிகரிகா ரஞ்சித், கே. நட்ராஜ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[4] இந்த தொடர் 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து என்ற திரைப்படத்தை தழுவி தொடராக எடுக்கப்படுகின்றது. இத்தொடர் திசம்பர் 7, 2020 முதல் மே 7, 2022 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி,[4] 409 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.

வேலைக்காரன்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
மூலம்முத்து
நடிப்பு
  • சபரி
  • கோமதி பிரியா
  • சத்யா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்409
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
தொகுப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 திசம்பர் 2020 (2020-12-07) –
7 மே 2022 (2022-05-07)
Chronology
முன்னர்சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (14:00)
பின்னர்செல்லம்மாள்

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
  • சபரி - வேலன்
    • விசாலட்சி வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன். முதலாளி அம்மா மீது அன்பும் பாசமும் கொண்டவன் மற்றும் ஜமீன் குடும்பத்தின் உண்மையான வாரிசு.
  • கோமதி பிரியா[5][6] - வள்ளி
    • ஜமீன் குடும்பத்தில் வேலை செய்யும் பெண்.
  • சத்யா[7] - ராகவன்
    • விசாலட்சியின் மகன், தற்போதைய ஜமீன் வாரிசு, சொல் பேச்சை கேட்காதவன்,வேலன் நன்பன் மற்றும் வேலைக்காரன்

துணைக் கதாபாத்திரம்

தொகு
  • சோனா நாயுடு - விசாலட்சி
    • ஜமீன் அம்மா, ராகவனின் தாய்.
  • வாசு விக்ரம் - சிங்கபெருமாள்
    • விசாலட்ச்சியின் சகோதரன்.
  • நிகரிகா ரஞ்சித் - நந்திதா
  • கே. நட்ராஜ்

மேற்கோள்கள்

தொகு
  1. "New daily soap Velaikkaran to premiere on December 7" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/new-daily-soap-velaikkaran-to-premiere-on-december-7/articleshow/79543298.cms. 
  2. "வேலைக்காரன் - புதிய தொடர்" (in ta). www.newsbugz.com. https://www.newsbugz.com/velaikkaran-serial-star-vijay-tv/. 
  3. "DID VIJAY TV STOPPED THIS HIT SERIAL FOR THEIR LATEST PROJECT?". www.behindwoods.com. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/popular-hit-vijay-tv-serial-stopped-for-latest-velaikkaran-serial.html. 
  4. 4.0 4.1 "Monday to Saturday at 2:00 P.M is the Telecast Time of Velaikkaran Serial". www.indiantvinfo.com. https://www.indiantvinfo.com/velaikkaran-tamil-serial-vijay/. 
  5. "Gomathi Priya Indian actress" (in en). winkreport.com. https://winkreport.com/gomathi-priya-indian-actress-wiki-bio-profile-caste-and-family-details-revealed/. 
  6. "Here's how Velaikkaran fame Gomathi Priya Balakumaran celebrated her birthday; see pics" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/heres-how-velaikkaran-fame-gomathi-priya-balakumaran-celebrated-her-birthday-see-pics/articleshow/80769122.cms. 
  7. "Vijay Tv new serial ‘Velaikkaran’ stars Bigg Boss fame NSK Ramya’s husband Sathya in the lead role" (in ta). interviewerpr.com. https://interviewerpr.com/vijay-tv-new-serial-velaikkaran-stars-bigg-boss-fame-nsk-ramyas-husband-sathya-in-the-lead-role/. 

வெளி இணைப்புகள்

தொகு
விஜய் தொலைக்காட்சி : திங்கள் - சனி மதியம் 2 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி வேலைக்காரன் அடுத்த நிகழ்ச்சி
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
(27 ஜூலை 2020 – 5 திசம்பர் 2020)
செல்லம்மாள்