வேலோர்வட்டம்
வேலோர்வட்டம் என்பது இந்தியாவில் கேரள மாநிலத்தில் காணப்படும் சேர்த்தலை என்ற இடத்தின் அருகாமையில் அமைந்த ஓர் இடமாகும்.
வேலோர்வட்டம் மகா தேவர் கோயில்
தொகுஇந்த இடம், மிகவும் பிரபலமான இந்துக்கள் போற்றும் இறைவன் சிவனை வழிபடும் "வேலோர்வட்டம் மகா தேவர் கோவில்" (വേലോർവട്ടം മഹാദേവ ക്ഷേത്രം) அமைந்த இடமாகும். இந்தக் கோவில் இரு நடைகள் கொண்டது, அதாவது இரு நுழை வாசல்களைக் கொண்டது, இதன் சிறப்பாகும். மேலும் கேரளாவில் இது போன்று காணப்படுவது மிகவும் அரிதாகும். இந்தக் கோவில் "ஆழ்வாஞ்சேரி தம்பிரான்களுக்கு" (ആഴ്വാഞ്ചേരി തമ്പ്രാക്കൾക്ക്) சொந்தமாகும் மேலும் தற்பொழுது கேரளா ஊராழ்மை தேவஸ்வ வாரியத்தின் (കേരള ഊരാഴ്മ ദേവസ്വം ബോർഡിന്റെ) (KUDB) கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 700 வருடங்களுக்கு முன், இந்தக் கோவிலை வில்வமங்களம் சுவாமி (വില്വമംഗലം സ്വാമി) அவர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.