வேல்ஹே தாலுகா
வேல்ஹே தாலுகா (Velhe taluka) (மராத்தி: वेल्हे तालुका இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 15 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் வேல்ஹே நகரம் ஆகும். வேல்ஹே தாலுகா 124 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[2] இது புனே மாவட்டத்தில் மக்கள்தொகை குறைந்த சிறிய தாலுக்கா ஆகும்.
வேல்ஹே தாலுகா | |
---|---|
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் வேல்ஹே தாலுகாவின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே மாவட்டம் |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | பாரமதி |
• சட்டமன்றத் தொகுதி | போர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 54,516 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வேல்ஹே வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 54,516 ஆகும். அதில் ஆண்கள் 27,504 மற்றும் 27,012 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 982 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6213 (11%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.96%. ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,635 மற்றும் 2,032 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 51,994 (95.37%), இசுலாமியர் 402 (0.74%), பௌத்தர்கள் 2,005 (3.68%) மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[3] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Talukas in Pune district". Archived from the original on 2010-03-10. பார்க்கப்பட்ட நாள் 2010-09-24.
- ↑ Velhe Taluka
- ↑ Velhe Taluka Population, Caste, Religion Data - Pune district, Maharashtra
வார்ப்புரு:புனே மாவட்டம்