வாஇல் குனைம்

(வேல் கோனிம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேயில் ஓனிம் (வாஇல் ஃஙுனைம்) (Wael Ghonim[2], அரபு மொழி: وائل غنيم‎, பிற எழுத்துப்பெயர்புகள்: Ghoneim, Ghonaim) (பிறப்பு: எகிப்தின் கெய்ரோவில் 23 திசம்பர் 1980) ஓர் பன்னாட்டு செயல்திறனாளர், கணினி பொறியாளர் மற்றும் சனவரி 2010 முதல் கூகிள் நிறுவனத்தின் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் விற்பனை சாற்றுதலுக்கு தலைவர் ஆவார்.[3]

வேயில் ஓனிம் (வாஇல் ஃஙுனைம்)
وائل غنيم
பிறப்புதிசம்பர் 23, 1980 (1980-12-23) (அகவை 43)
கெய்ரோ, எகிப்து
இருப்பிடம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
தேசியம்எகிப்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கெய்ரோ பல்கலைக்கழகம் (அறிவியல் இளங்கலை பட்டம்)
கெய்ரோவின் அமெரிக்கப் பல்கலைக்கழகம் (மேலாண்மை முதுகலைப்பட்டம்)
பணிகூகிள் கிழக்கு வடக்கு ஆபிரிக்க
சாற்றுதல் தலைவர்
பன்னாட்டு செயல்திறனாளர்
கணினி பொறியாளர்
செயற்பாட்டுக்
காலம்
1998-நடப்பு
பணியகம்கூகிள்
சமயம்முசுலிம்
பிள்ளைகள்2[1]

2011ஆம் ஆண்டு எகிப்திய எழுச்சிக்கு வித்திட்ட காரணங்களில் ஒன்றாக அமைந்த "நாங்கள் அனைவரும் கலீத் சயீத்" என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கு அவரே நிர்வாகி என்ற காரணத்தால் பதினோரு நாட்கள் காவலில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இதனை விவரித்த அவரது உணர்ச்சிமிகு நேர்காணல்[4] மூலம் மக்களாட்சி புரட்சி புத்துயிர் பெற்று பன்னாட்டளவில் பாராட்டப்படலானார்.[5][6] அமெரிக்காவின் டயம் என்ற பத்திரிகையின் 2011இல் உலகின் மிகப்பிரபலமான 100 நபர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Fears for Google employee in Egypt". Amnestyusa.org. 2011-01-28. Archived from the original on 2011-02-09. பார்க்கப்பட்ட நாள் 2011-02-08.
  2. ஒலிப்புதவி: [1] [2]
  3. "Wael Ghonim, Google's Marketing Head Reportedly Missing In Egypt". The News Ny. 2011-02-01. Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2011-02-08.
  4. "An interview with him on Dream TV 2 (அரபு மொழி)engl.subtitle". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-08.
  5. "Google worker is Egypt’s Facebook hero". Financial Times. February 9, 2011. http://www.ft.com/cms/s/0/e41c5faa-3475-11e0-9ebc-00144feabdc0.html#axzz1DfvBdbyf. 
  6. Swaine, Jon (11 Feb 2011). "Egypt crisis: the young revolutionaries who sparked the protests". த டெயிலி டெலிகிராப் (London). http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/egypt/8317055/Egypt-crisis-the-young-revolutionaries-who-sparked-the-protests.html. 
  7. "டயம்". Archived from the original on 2011-07-25. பார்க்கப்பட்ட நாள் 2011-04-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாஇல்_குனைம்&oldid=3571102" இலிருந்து மீள்விக்கப்பட்டது