வேளாண்கனிமம்
வேளாண்கனிமங்கள் (Agrominerals) என்பவை விவசாயம் மற்றும் தோட்டக்கலைக்குப் பயன்படும் கனிமங்களைக் குறிக்கும். பொதுவாக இவை தாவரங்களுக்குத் தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. சில வேளாண்கனிமங்கள் இயற்கையிலேயே அடர்த்தியாகத் தோன்றி மண்ணுக்குத் தேவையான மாற்று உரங்களாகவும் அல்லது மண் கூட்டுப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன [1].
வேளாண்கனிமங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் துறை வேளாண்கனிமவியல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. வேளாண்கனிமங்கள் தோண்டியெடுக்கப்படும் பகுதிகளில் உருவாகும் வெற்றிடங்களில் நிலையான விவசாய முறைகள் வழியாக மண் வளத்தை நிரப்புதல் போன்ற பிரச்சினைகளில் வேளாண்கனிம விஞ்ஞானிகள் கவனம் குவித்து ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-14. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.