வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், வள்ளநாடு கிள்ளிகுளத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் மூன்றாவதாக அமைக்கப்பெற்ற வேளாண் கல்லூரி ஆகும்.
Killikulam Campus | |
குறிக்கோளுரை | உழுவோம் உழைப்போம் உயர்வோம் |
---|---|
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 1984 - 1985 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
உாிமைக்கட்டளை
தொகுஇக்கல்வி நிறுவனம் மூன்று முக்கிய நோக்கங்களை உள்ளடக்கியது.
- கல்வி
- ஆராய்ச்சி
- விரிவாக்கம்
துறைகள்
தொகுஇந்நிறுவனத்தில் 8 முக்கிய துறைகள் செயல்படுகின்றன.[1] அவையாவன
- உளவியல் துறை
- மரபியல் மற்றும் பயிா் பெருக்கத் துறை
- மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை
- தோட்டக்கலையியல் துறை
- வேளாண்பூச்சியியல் துறை
- சமூகவியல் துறை
- பயிா் நோயியல் துறை
- பண்னை நிர்வாகத் துறை
வளாக புவியியல் அமைப்பு:
தொகுகல்லூாியின் வளாகம் மற்றும் பண்னை புவியியல் அமைப்புபடி 8°46 வடக்கு அட்சரேகை,77°42. கிழக்கு தீர்க்கரேகை மற்றும் கடல் மட்டத்திலிருந்து 40 மீட்டா் குத்துயரத்திற்கு மேல் அமைந்துள்ளது.[2] இங்கு ஆண்டு சராசரி மழையளவு 736.7 மி.மீ ,40 மழை நாட்களில் கிடைக்கும் படி அமைந்தள்ளது. இது வள்ளநாடு வெளிமான்கள் சரணாலத்தின் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது . இது 476.61 ஹெக்கடா்கள் பரப்பளவு உடையது. இப் பரந்த பரப்பில் நீா் பிடிப்பு அல்லது நீா் ஆதாரப்பரப்பகுதியின், கிள்ளிகுளம் நீா் தொட்டியும் அமைந்துள்ளது, இப்பண்ணை நிலப்பரப்பு ஆராய்ச்சிகளுக்காகவும், விதை உற்பத்திக்காகவும் பல்வேறு துறைகளுக்கு பிரித்தளிக்கப்பட்டுள்ளது.
வளாக வசதிகள்
தொகுஇந்நிறுவனத்தின் எல்லாத் துறைகளும் தகுந்த ஆய்வகங்களுடன் அமைந்துள்ளது. மேலும் இக்கல்வி நிறுவனம், நூலகம், கணிணி நிலையம் , உடற்பயிற்சிக்கூடம் , கலையரங்கம் , விளையாட்டு மைதானம் , இணையத்துடன் உள்ள தேர்வறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.