வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர்

கோவையில் உள்ள விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் அமைந்த கல்லூரிகளுள் ஒன்றாகும். விவசாய பொறியியல் கற்பிக்கத் தென்னிந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட கல்லூரி ஆகும்.

ஜீலை மாதம் 1972 ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதுநிலை கல்வி 1977 ஆம் ஆண்டிலும் முனைவர் பட்டப் படிப்பானது 1987 ஆம் ஆண்டிலும் உணவு பதப்படுத்தும் பொறியியல் துறை 1998 ஆம் ஆண்டிலும் தொடங்கியது . நாட்டிலேயே முதல் முறையாக ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையானது 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இரு தொழில்நுட்ப இளங்கலை பட்டப் படிப்பு துறைகள் உள்ளன. அவை உணவு பதப்படுத்தும் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல் ஆகும். இவ்விரண்டு்ம் நான்கு ஆண்டுகள் கற்க வேண்டிய துறைகளாகும்.

வெளியிணைப்புகள் தொகு