வேளாண் ஆராய்ச்சி நிலையம், மன்னுத்தி

வேளாண் ஆராய்ச்சி நிலையம், மன்னுத்தி என்பது கேரளத்தில் உள்ள ஒரு வேளாண் ஆராய்ச்சி மையமாகும்.

இந்த வேளாண் ஆராய்ச்சி மையம் கேரளத்தின், திருச்சூர் மாவட்டம் ஒல்லுக்கராவிலுள்ள மன்னுத்தியில் 1957 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு நெல் ஆராய்ச்சி நிலையமாக கேரள வேளாண் துறையின்கீழ் செயல்படத் துவங்கியது. 1972 ஆம் ஆண்டு இந்த மையம் வேளாண்மைத் துறையிடமிருந்து பிரித்து கேரள வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1976 ஆம் ஆண்டில், நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு, இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு, “வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்” மன்னுத்தி எனப் பெயரிடப்பட்டு 01.01.1988-லிருந்து செயல்பட்டு வருகிறது.

நோக்கம்

கோல் நில மேலாண்மை திட்டம் மற்றும் தேங்காய் ஆகியவற்றில் இதன் ஆராய்ச்சி செயல்பாடுகள் உள்ளன. காய்கறிகள் மற்றும் இயற்கை பண்ணை ஆகியவற்றில் சரிபார்க்கும் ஆராய்ச்சி செயல்கள் மேற்கொள்ளப்படுகிறது.

வெளியிட்ட இரகங்கள்

தொகு

மிகவும் குறுகிய கால சிவப்பு நிற மேலோடு கொண்ட 75-80 நாட்களில் முதிர்ச்சியடையும் “ஹ்ரஸ்வா” என்னும் பயிர்வகையை இந்நிலையம் உருவாக்கியுள்ளது. பயிரிடுவதற்கான மற்றொரு இரகமான “அகல்யா” என்னும் இரகத்தையும் வெளியிட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு